தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Hbd Aamir Khan An Actor Who Fits Any Role Perfectly Today Is Aamir Khans Birthday

HBD Aamir Khan : எந்த கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாக பொருந்தும் நடிகர்! அமீர்கான் பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Mar 14, 2024 06:00 AM IST

HBD Aamir Khan : அந்தப்படம் அவருக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படம் ஆகிய பிலிம்பேர் விருதுகளை பெற்றுத்தந்தது. இந்தப்படம் டிஸ்லெக்ஷியா பிரச்னைகளால் கஷ்டப்படும் குழந்தைகள் குறித்து பேசிய படம். இந்தப்படமும் இவருக்கு இந்தியா முழுவதும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

HBD Aamir Khan : எந்த கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாக பொருந்தும் நடிகர்! அமீர்கான் பிறந்த தினம் இன்று!
HBD Aamir Khan : எந்த கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாக பொருந்தும் நடிகர்! அமீர்கான் பிறந்த தினம் இன்று!

ட்ரெண்டிங் செய்திகள்

அவருக்கு இன்று பிறந்தநாள். நடிகர் என்பதை கடந்த மனிதநேயமிக்க மனிதர். பிறருக்கு உதவும் நற்குணம் படைத்த நல்ல மனிதர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாத்துறையில் பல்வேறு இடங்களிலும் தடம் பதித்தவர். 

நான்கு தேசிய விருதுகள் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளுக்குச் சொந்தக்காரார். இந்திய அரசின் உச்ச விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றவர். சீன அரசும் இவரை கௌரவித்துள்ளது. 

நாசர் ஹீசைனின் யாடன் கீ பாரத் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகனார். வளர்ந்த பின்னர் ஹோலி என்ற படத்தில் நடித்தார். குயாமத் சே குயாமத் படத்திற்கு பின்னர் முழுநேர நடிகரானார். ராக் படத்தில் முதல் தேசிய விருது கிடைத்தது. 

பின்னர் கமர்ஷியல் படங்கள் அவருக்கு கை கொடுத்தது. தில் படத்தில் மாதுரி தீட்சித்தை உருகி, உருகி காதலிக்கும் அமீர்கானை பிடிக்காது என்று யாராலும் நிச்சயம் கூறமுடியாது. அப்போதைய நாட்களில் அந்த ஜோடி பாலிவுட்டின் சிறந்த ஜோடியாக இருந்தது.

பின்னர் அமீர்கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை துவக்கி, லகான் என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் ஆஸ்கார் வரை சென்றது. இப்பாடத்தின் கதைக்களம் விளையாட்டு துறையை மையமாகக்கொண்டது. 

இந்தப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லையென்றாலும் அப்போது இந்தியா முழுவதும பிரபலமானது. இதன் மூலம் பாலிவுட்டின் ஸ்டார் அமீர் கான் இந்தியா முழுவதும் மிகப்பிரபலமடைந்தார். 

ஃபானா, ரங்தே பசந்தி ஆகிய படங்களும் அமீர் கானுக்கு சிறந்த புகழை பெற்றுத்தந்தன. பின்னர் தாரே சமீன் பர் என்ற படத்தை இயக்கி நடித்தார். 

அந்தப்படம் அவருக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படம் ஆகிய பிலிம்பேர் விருதுகளை பெற்றுத்தந்தது. இந்தப்படம் டிஸ்லெக்ஷியா பிரச்னைகளால் கஷ்டப்படும் குழந்தைகள் குறித்து பேசிய படம். இந்தப்படமும் இவருக்கு இந்தியா முழுவதும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

கஜினி, தமிழில் சூர்யா நடித்த படம், இந்தியில் அது அமீர்கானின் படம். அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அடுத்து வந்த 3 இடியட்ஸ, தமிழில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் நடித்த படம், இந்தியில் 3 இடியட்சாக அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோர் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற படம். தூம், பிகே, தங்கல் ஆகிய படங்களும் அமீர்கானின் சிறப்பான படங்கள். 

தங்கல் படத்தில் அவர் ஒரு கட்டுக்கோப்பான தந்தையாக நடித்திருப்பார். பெண் குழந்தைகளை இரண்டாம்பட்சமாக நடத்தும் கிராமத்தில் அமீர்கான் தனது இரு பெண் குழந்தைகளுக்கும் குஸ்தி சொல்லி கொடுத்து, குஸ்தி போட்டியில் கலந்துகொள்ள வைப்பார். 

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில், ஒரு கட்டத்தில் அவரது மகளே அவரை எதிர்க்கும் நிலையிலும், கடமை தவறாமல் அவர் தனது மகள்களை குஸ்தி வீராங்கனை ஆக்குவார். இந்தப்படம் இந்திய குஸ்தி வீராங்கனைகளின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட கதை. 

இந்தியா மற்றும் வெளி நாடுகளிலும் அதிக வசூலைக்கொடுத்தப்படம் தங்கல். சிறந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடித்த அனைவருமே ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு நடித்து படத்தின் வெற்றிக்கு பாடுபட்டிருப்பார்கள். பாலிவுட்டின் சூப்பர் ஹீரோ, ஆல் டைம் பேவரைட் அமீர்கான் தன் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று வாழ ஹெச்டி தமிழ் அவரை வாழ்த்துகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்