Harvey Weinstein: பாலியல் வழக்கு குற்றவாளி தயாரிப்பாளர் வெயின்ஸ்டீனுக்கு கோவிட் பாதிப்பு! பூட்டப்பட்ட வார்டில் சிகிச்சை
சமீபத்தில் நடந்த நீதிமன்ற விசாரணையில், ஹார்வி வெய்ன்ஸ்டீன் தரப்பு வழங்கறிஞர்கள் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றுமாறும் கேட்டுக் கொண்டனர்.

ஹாலிவுட் சினிமாவின் முன்னாள் தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன், கோவிட் 19 மற்றும் இரு நுரையீரலிலும் நிமோனியா தொற்று பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக நியூயார்க் நகர சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைதாகி குற்றவாளி என நிருபிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் வெய்ன்ஸ்டீன், நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்திருந்தார். அப்போது அவரது உடல்நிலை பாதிப்பு குறித்து வாதிட்ட வழங்க்கறிஞர்கள், சிறையிலிருந்து மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இதையைடுத்து நியூயார்க் நகரின் ரைக்கர்ஸ் தீவு சிறை வளாகத்தில் இருந்த அவர், பெல்லூவ் மருத்துவமனையில் பூட்டிய வார்டுக்கு மாற்றப்பட்டார்.
வெய்ன்ஸ்டீனுக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள்
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஸ்பைனல் ஸ்டெனோசிஸ், இதயம் மற்றும் நுரையீரலில் திரவம் குவிதல் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆகியவை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரதுறை பரிந்துரைத்த சிகிச்சைகள் பற்றி வெய்ன்ஸ்டீனின் சிறை ஆலோசகரான கிரேக் ரோத்ஃபீல்டிடம் சமர்பிக்கப்பட்ட பின் வெளியிட்ட அறிக்கையில், "அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நாங்கள் எங்கள் நன்றியைத் தொடர்ந்து தெரிவித்துக் கொள்கிறோம். வெய்ன்ஸ்டீன் உடனடியாக பெல்லூ மருத்துவமனை சிறைச்சாலை வார்டுக்கு மாற்றப்பட்டார்." என கூறப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கு
கடந்த 2020ஆம் ஆண்டில், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான 72 வயதாகும் வெய்ன்ஸ்டீன் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை புகார்கள் பல்வேறு நடிகைகள் அடுக்கினர். இந்த குற்றச்சாட்டில் வெயின்ஸ்டீன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் மேல்முறையீட்டில் வெய்ன்ஸ்டீனுக்கு விதக்கப்பட்ட தண்டனை நீதிபதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளரான இவரின் தவறான நடத்தை தொடர்பாக குற்றம் சாட்டிய பெண்களிடமிருந்து சாட்சியங்களைக் கேட்டிருக்கக்கூடாது. ஆனால் அவர்களின் குற்றச்சாட்டுகள் வழக்கின் ஒரு பகுதியாக இல்லை என வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
வெய்ன்ஸ்டீன் மறுப்பு
2022இல் லாஸ் ஏஞ்சல்ஸில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பின், கலிபோர்னியா நீதிமன்றத்தால் வெய்ன்ஸ்டீனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தண்டனை நிறுத்தப்பட்ட நிலையில் அவர் சிறை வாசம் அனுபவித்து வந்தார்.
தன் மீதான குற்றச்சாட்டில், யாரையும் பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்று வெய்ன்ஸ்டீன் மறுத்துள்ளார்.
மீடு புகார்
உலகம் முழுவதும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் மீடூ இயக்கத்தின் மூலம், தங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை பாதிக்கப்பட்ட பலரும் வெளிப்படுத்தினர். இதில் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் கட்டாய பாலியல் வன்புணர்வு புகார்களை நடிகைகள் பலரும் அடுக்கினர். அவர் மீது 80க்கும் மேற்பட்ட நடிகைகள், மாடல் அழகிகள் என பலரும் புகார் அளித்திருந்தனர்.
இந்த வழக்கில் வெய்ன்ஸ்டீன் குற்றவாளி என ஹேட்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நடிகைகள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சிறைவாசம் அனுபவித்து உடல்நலம் குன்றிய நிலையில் இருந்து வரும் வெயின்ஸ்டீன் உடல் நல பாதிப்புகளால் பூட்டப்பட்ட மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/

டாபிக்ஸ்