மிக்ஜாம் புயல் பாதிப்பு.. கோடி ரூபாய் பொருட்களை இழந்த ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மிக்ஜாம் புயல் பாதிப்பு.. கோடி ரூபாய் பொருட்களை இழந்த ஹாரிஸ் ஜெயராஜ்

மிக்ஜாம் புயல் பாதிப்பு.. கோடி ரூபாய் பொருட்களை இழந்த ஹாரிஸ் ஜெயராஜ்

Aarthi V HT Tamil Published Dec 09, 2023 12:15 PM IST
Aarthi V HT Tamil
Published Dec 09, 2023 12:15 PM IST

மிக்ஜாம் புயல் பாதிப்பால் ஹாரிஸ் ஜெயராஜ்ஜிற்கு கோடி ரூபாய் பொருட்கள் சேதனமானது.

ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ்

இடைவிடாது கொட்டி தீர்த்த இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. வேளச்சேரி, பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மழை தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பொது மக்கள் மட்டுமில்லாமல் நடிகர், நடிகைகள் வீடும் தண்ணீரால் சூழப்பட்டது. பலரும் வெளியே வர முடியாத சூழல் கூட ஏற்பட்டது.

அந்த வகையில் சென்னை வளரசரவாகத்தில் அமைந்து உள்ள இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் வீடு வெள்ள நீரால் அதிகளவில் சூழ்ந்து உள்ளது. இதனால் அவரது வீட்டில் இருந்து வேறு யாரும் வெளியேற முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டை சூழ்ந்திருந்த வெள்ள நீர் வெளியேற்றும் முயற்சிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். முதல்கட்டமாக பம்பு செட் மோட்டார் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் வீட்டிலிருந்து வெள்ளம் வெளியேற்றப்பட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டின் அண்டர்கிரவுண்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் விலை உயர்ந்த கார் மொத்தமும் தன்ணீரில் முழுக்கிறது. எஞ்சின் ஆயிலும் லீக்காகியதாக சொல்லப்படுகிறது.

வெள்ள நீருடன், கார் எஞ்சின் ஆயிலும் வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஹாரிசின் ஸ்டூடியோ உள்ளேயும் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஹாரிஸ் வீட்டில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.