HBD Harish Kalyan: முதல் படமே சர்ச்சை.. பெண்களின் கனவு நாயகன் ஹரிஷ் கல்யாண் பற்றி இந்த விஷயம் தெரியுமா?
நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

சென்னையில் 1990 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பிறந்தவர், ஹரிஷ் கல்யாண். கல்யாண் - கெளஸல்யாவின் ஒரே மகன் ஆவார். அதனால் தான் இவரை 10 வயது வரை வீட்டில் தூக்கி மட்டுமே வைத்து இருந்தார்கள்.
இவர் வீட்டில் படங்களில் ஷுட்டிங் நடந்து வந்தது. ஆனால் நாளடைவில் இவர் வளர்வதால் சினிமா ஆசை வந்துவிடக் கூடாது என எண்ணி பட படப்பிடிப்பை நிறுத்தி உள்ளனர். இருப்பினும் அவருக்குச் சிறுவயதிலேயே சினிமா மீது ஆசை வந்துவிட்டது. அதனால் திரைத்துறையில் தான் நடிக்க வேண்டும் என அப்போதே தீர்மானம் செய்துவிட்டார்.
ஒரு நாள் அவரின் அம்மாவிடம் சென்று தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாகச் சொல்லி உள்ளார் ஹரிஷ் கல்யாண். பள்ளி படிப்பை முடித்துவிடு மீதி விஷயங்களை பிறகு பார்த்து கொள்ளாமல் என கூறி உள்ளார் தாய். அதற்கு பிறகு பொறியியல் கல்லூரியில் இவரைச் சேர்த்து உள்ளனர். 6 மாதம் சென்ற பிறகு தனக்கு செட் ஆகாத காரணத்தினால் வீட்டில் சொல்லி விஸ்காம் சேர்த்து உள்ளார்.
விஸ்காம் படிக்கும் போது தான் ஹரிஷுக்கு சினிமா வாய்ப்பு வந்து உள்ளது. 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவுல் நுழைந்தார்.
முதல் படமேஹரிஷ் கல்யாண் சர்ச்சை
இவர் நடித்த முதல் படமே சர்ச்சையில் சிக்கியது. மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே ஏற்படும் உறவு தான் படத்தின் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக ஹரிஷ் கல்யாண் நடித்த படங்கள் மூன்று வருடத்திற்கு வரவில்லை.
அதற்குப் பிறகு பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்கள் அவர் நடித்தாலும் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதன் மூலம் கிடைத்த புகழால் 2018 ஆம் ஆண்டு பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அப்படமும் ஹிட்டாக அவர் நடிக்கும் படமே எல்லாமே ரசிகர்களை கவர்ந்தது. காதல் படத்தில் மட்டுமே நடித்த வந்த ஹரிஷ் கல்யாண் 2019 ஆம் ஆண்டு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் மாறுபட்ட கோணத்தில் நடித்திருந்தார்.
சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இவர் அடிக்கடி நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவர் வீட்டில் அமர்ந்து பேசி மகிழ்வார்கள்.
சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்கும் வேலையில் கடந்த ஆண்டு நர்மதா உதயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது தோனி தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அடுத்ததாக பார்க்கிங் படத்தில் நடிக்க உள்ளார்.
இன்று 33 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் ஹரிஷ் கல்யாணுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்