காதலே காதலே தனிப்பெரும் துணையே… பேரழகு, காதல், கெரியர், நிச்சயம், சர்ச்சை.. 42 வது பிறந்தநாளை கொண்டாடு த்ரிஷா!
கில்லி தனலட்சுமியை மறக்க முடியுமா? நடிகர் விஜய்க்கு ஜோடியாக, பிரகாஷ் ராஜின் செல்லமாக என்று அந்தப்படத்தில் மறைத்து வைத்த காதலையும், கூடவே துரத்தும் பயத்தினையும் அவர் வெளிப்படுத்தி இருந்த விதம் ரசிகர்களை தனலட்சுமையை ரசிகர்களோடு நன்றாக கனெக்ட் ஆக வைத்தது.

நடிகை த்ரிஷாவுக்கு அறிமுகம் தேவையா என்ன? 1999ம் ஆண்டில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்ததில் இருந்து கவர்ந்து வரும் அவருக்கு இன்று 42 வது பிறந்தநாள். மௌனம் பேசியதே படத்தில் கதாநாகியாக என்ட்ரி கொடுத்த அவருக்கு, முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
அதனை தொடர்ந்து மனசெல்லாம், சாமி, லேசா... லேசா...,அலை, எனக்கு 20 உனக்கு 18 என தொடர்ந்து படங்கள் நடித்தவருக்கு சாமி படத்தில் இடம் பெற்ற கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்காலாமா? பாடல் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
அதுவரை தமிழில் நடித்துக்கொண்டிருந்த த்ரிஷா, 2004ம் ஆண்டு வர்ஷம் படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகம் ஆனார். அந்தப்படமும் ஹிட்டாகி நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.