தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Mohanlal: மல்யுத்த வீரர் முதல் சினிமா வரை..உச்சம் தொட்ட நட்சத்திரம் நடிகர் மோகன்லால் பற்றிய சுவாரஸ்ய கதை!

HBD Mohanlal: மல்யுத்த வீரர் முதல் சினிமா வரை..உச்சம் தொட்ட நட்சத்திரம் நடிகர் மோகன்லால் பற்றிய சுவாரஸ்ய கதை!

Karthikeyan S HT Tamil
May 21, 2024 06:42 AM IST

HBD Mohanlal: மலையாள திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மோகன்லால் இன்று (மே 21) 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளில் அவரது திரைப்பயணம் குறித்த சுவாரஸ்யமான சிறப்பு தொகுப்பை இங்கே காணலாம்.

HBD Mohanlal: மல்யுத்த வீரர் முதல் சினிமா வரை..உச்சம் தொட்ட நட்சத்திரம் நடிகர் மோகன்லால் பற்றிய சுவாரஸ்ய கதை!
HBD Mohanlal: மல்யுத்த வீரர் முதல் சினிமா வரை..உச்சம் தொட்ட நட்சத்திரம் நடிகர் மோகன்லால் பற்றிய சுவாரஸ்ய கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

மல்யுத்த வீரர்

1977-78ல் மோகன்லால் கேரளாவில் மல்யுத்த சாம்பியன் பட்டம் வென்றவர். டெல்லியில் நடக்கவிருந்த தேசிய மல்யுத்த சாம்பியன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஃபாசில் இயக்கிய 'மஞ்சில் விரிஞ்ஞ பூக்கள்' படத்தின் ஆடிஷனுக்கு சென்றதால் அந்த போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அதுதான் மோகன்லாலின் முதல் என்ட்ரி. முதலில் வில்லனாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர். அதன் பிறகு படிப்படியாக ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

முதல் தேசிய விருது

மோகன்லால் நடித்த எந்த படத்தை பார்த்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாகத்தான் தோன்றும். அந்த அளவுக்கு உணர்வு பூர்வமான நடிப்பை வழங்கி இருப்பார். 1989-ல் லோகிததாஸ் எழுதி சிபி மலையில் இயக்கத்தில் வெளியான 'கிரீடம்' மோகன்லாலின் திரைவாழ்க்கையில் மட்டுமல்லாமல் மலையாள சினிமா வரலாற்றிலும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிப்புக்கான சிறப்புப் பாராட்டு தேசிய விருது கிடைத்தது. இதுவே மோகன்லால் பெற்ற முதல் தேசிய விருதாகும்.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த மோகன்லால் பரதன், வானப்பிரஸ்தம் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். இதில் 'வானப்பிரஸ்தம்' சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது.

தமிழிலும் தடம் பதித்த மோகன்லால்

மோகன்லாலின் நடிப்பு எல்லை மலையாள சினிமாவை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரதிபலித்தது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து 'இருவர்', 'சிறைச்சாலை', 'ஜில்லா', 'உன்னைப் போல் ஒருவன்', 'காப்பான்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அனைத்து படங்களிலும் தன்னுடைய முழு பங்களிப்பை கொடுத்திருப்பார். குறிப்பாக ‘இருவர்’ படத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், ஏழைகளின் விடிவெள்ளியாகவும், அரசியலில் தோல்வியே அடையாத முதல்வராகவும் கொடிகட்டிப் பறந்த எம்ஜிஆரை அடிப்படையாகக் கொண்டு உருவாகப்பட்ட ஆனந்தன் கதாபாத்திரத்தில் அவ்வளவு சிறப்பாகவும் உயிர்ப்புடனும் நிகழ்த்திக் காட்டினார் என்றால் அது மிகையாகாது. தெலுங்கு, கன்னடம். இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

திரையுலகில் 40 ஆண்டு நிறைவு

திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்தாலும் புதிய இயக்குநர்களுடன் கைகோர்த்து தன்னைக் காலத்துக்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டு வருகிறார். 2013-ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் அதற்கு சிறந்த உதாரணம். 'த்ரிஷ்யம்' மலையாள சினிமா வரலாற்றில் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றதோடு தமிழ் உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மோகன்லாலின் நட்சத்திர அந்தஸ்தை மீட்டெடுத்தது அந்தப் படத்தின் வெற்றி.

மலையாள சூப்பர் ஸ்டார் மற்றும் நடிப்பு நாயகன் மோகன்லால் இன்று (மே 21) தனது 64வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஒட்டுமொத்த திரைபிரபலங்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாமும் நம்முடைய மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்..ஹேப்பி பர்த் டே மோகன்லால்..!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்