HanuMan Box Office: பெரிய ஹீரோ படங்களுக்கு டஃப் கொடுக்கும் ஹனுமான் வசூல்: 23ஆவது நாளில் இத்தனை கோடியா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hanuman Box Office: பெரிய ஹீரோ படங்களுக்கு டஃப் கொடுக்கும் ஹனுமான் வசூல்: 23ஆவது நாளில் இத்தனை கோடியா?

HanuMan Box Office: பெரிய ஹீரோ படங்களுக்கு டஃப் கொடுக்கும் ஹனுமான் வசூல்: 23ஆவது நாளில் இத்தனை கோடியா?

Marimuthu M HT Tamil
Feb 04, 2024 05:19 PM IST

ஹனுமான் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 23ஆவது நாளிலும் சக்கைப் போடு போடுகிறது.

HanuMan Box Office: பெரிய ஹீரோ படங்களுக்கு டஃப் கொடுக்கும் ஹனுமான் வசூல்: 23ஆவது நாளில் இத்தனை கோடியா?
HanuMan Box Office: பெரிய ஹீரோ படங்களுக்கு டஃப் கொடுக்கும் ஹனுமான் வசூல்: 23ஆவது நாளில் இத்தனை கோடியா?

தெலுங்கு மொழியில் இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கிய இப்படம் வெளியான மூன்று வாரங்களுக்குப் பிறகு உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நிலையான இடத்தை எட்டியுள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 290.05 கோடி வசூலித்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் கூறியுள்ளார். மேலும் வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை(பிப்ரவரி 3) மட்டும், ரூ.6.83 கோடியை வசூலித்தது. இப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானதுதான் இப்படத்தின் முக்கிய வெற்றிக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.  

ஹனுமான் சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர், வினய் ராய் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியானது. 

இப்படத்தின் கலெக்‌ஷன் குறித்து, திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் எக்ஸ் தளத்தில்  பதிவு செய்துள்ளதாவது, "நான்காவது சனிக்கிழமை அனுமான் திரைப்படம் அற்புதமான கலெக்‌ஷனுடன் வளர்ச்சியைக் கண்டுள்ளார். இப்படம் 300 கோடி ரூபாயை ரீச் செய்வதற்கு, இன்னும் சில நாட்களே உள்ளன.

நாள் வாரியாக அனுமான் திரைப்படம் வசூலித்த வசூலையும் மனோபாலா விஜயன் பட்டியலிட்டுள்ளார். அதில், " முதல் நாள் 1 - ரூ.21.35 கோடி, 2ஆவது நாள் - ரூ.29.72 கோடி (கூடுதல் பிரீமியர்கள் உட்பட), மூன்றாவது நாள் - ரூ.24.16 கோடி, நான்காவது நாள் - ரூ. 25.63 கோடி, ஐந்தாவது நாள் - ரூ.19.57 கோடி, ஆறாவது நாள் - ரூ.15.40 கோடி, ஏழாம் நாள் - ரூ.14.75 கோடி, எட்டாம் நாள்  - ரூ. 14.20 கோடி, ஒன்பதாவது நாள் - ரூ.20.37 கோடி,10ஆவது நாள் - ரூ.23.91 கோடி, 11ஆவது நாள் - ரூ.9.36 கோடி, 12ஆவது நாள் - ரூ. 7.20 கோடி, 13ஆவது நாள் - ரூ. 5.65 கோடி, 14ஆவது நாள் - ரூ. 4.95 கோடி, 15ஆவது நாள் - ரூ.11.34 கோடி, 16ஆவது நாள் - ரூ. 9.27 கோடி, 17ஆவது நாள் - ரூ.12.89 கோடி, 18ஆவது நாள் - ரூ. 3.06 கோடி, 19ஆவது நாள் - ரூ. 2.87 கோடி, 20ஆவது நாள் - ரூ. 2.71 கோடி, 21ஆவது நாள் - ரூ. 2.52 கோடி, 22ஆவது நாள் - ரூ. 2.34 கோடி, 23ஆவது நாள் - ரூ. 6.83 கோடி என மொத்தம் ரூ. 290.05 கோடி வசூல் ஆகியுள்ளது"எனத் தெரிவித்தார். 

ஹனுமான் வெளியானவுடன் விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக புராணங்களின் கதையோடு கிளாசிக் நல்ல கதையம்சம் மற்றும் சூப்பர் ஹீரோ கதையைத் தொட்டமைக்காக இப்படம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. உலக பாக்ஸ் ஆபிஸில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், வெங்கடேஷின் சைந்தவ் மற்றும் நாகார்ஜுனாவின் ’நா சாமி ரங்கா’ ஆகியவற்றுடன் ரிலீஸ் ஆன போதிலும், ஹனுமான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. 

ஹனுமான் படம் சொல்வது என்ன?

ஹனுமான் அஞ்சனாத்ரி என்ற கற்பனையான ஊர் ஒன்று காட்டப்படுகிறது. அங்கு ஹனுமந்து (தேஜா சஜ்ஜா) ஹனுமானின் சக்திகளைப் பெறும் ஒரு சிறிய திருடனாக நடிக்கிறார். அஞ்சனாத்ரி மக்களைக் காப்பாற்ற, அவர் மைக்கேல் என்னும் வில்லனுக்கு எதிராக வெறியாக கிளம்புகிறார். அவர் தன்னை ஒரு வல்லமைமிக்க சூப்பர் ஹீரோவாக மாற்றும் ஒரு சக்தியைப் பெறுகிறார். மக்களை இறுதியாக காப்பாற்றுகிறார். 

அயோத்தியில் ராமர் ஆலயத்தின் குடமுழுக்கு நடந்தபோது, இயக்குநர் பிரசாந்த் வர்மா, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். அதில் ஹனுமான் என்ற ஹேஷ்டேக் இருந்தது. அதற்கான பூஜையும் அதே நாளில் செய்யப்பட்டது. அவர் இயக்கும் இரண்டாவது படத்தின் பெயர், அதிரா ஆகும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.