Hansika Motwani: நாத்தனார் கொடுமையால் சிக்கிய ஹன்சிகா! பாய்ந்த வழக்கு.. நடந்தது என்ன?
நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைபடுத்துவதாக ஹன்சிகாவின் அண்ணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர், சமீபத்தில் காதலனை கரம் பிடித்து திருமண பந்தத்தில் இணைந்தார். இந்நிலையில், ஹன்சிகா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அவரது அண்ணி.
ஹன்சிகா குடும்பம் மீது புகார்
ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனை வருவதாகவும், அதனால் தான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்கான் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
முஸ்கான், தனது கணவர் பிரசாந்த் மோத்வானி, மாமியார் மோனா மோத்வானி, மற்றும் மைத்துனி ஹன்சிகா மோத்வானி ஆகியோர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழும் சொத்து மோசடி சட்டத்தின் கீழும் குற்றம் சாட்டியுள்ளார்.
எஃப் ஐ ஆர் பதிவு
முஸ்கான் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு எதிரான வேலைகளை செய்து என் திருமண வாழ்க்கையை முறிக்க பார்ப்பதாக கடந்த டிசம்பர் 18ம் தேதி மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் எஃப் ஐ ஆர் பதிவு செய்த போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 498-A, 323, 504, 506 மற்றும் 34ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்,
இந்த புகார் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முஸ்கான், தனது கணவர் பிரசாந்த் மற்றும் அவரது அம்மா, தங்கைக்கு எதிராக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
2 வருடத்தில் முடிவுக்கு வந்த திருமணம்
பின் பேசுகையில், நானும் பிரசாந்த் மோத்வானியும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். பின் எங்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டதால் கடந்த 2022ம் ஆண்டு பிரிந்து வாழத் தொடங்கினோம்.
நிலைமை இப்படி இருக்கையில், பிரசாந்த் குடும்பத்தினர் என்னிடம் இருந்து விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கேட்டனர் மேலும், தன்னிடம் சொத்து மோசடியில் ஈடுபட்டனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மாமியார் மற்றும் மைத்துனி ஹன்சிகா எனது திருமண வாழ்க்கையில் தலையிட்டு, கணவருடனான உறவைச் சீர்குலைத்தனர் என்றும் முஸ்கான் குற்றம் சாட்டியுள்ளார். கணவரின் வீட்டு வன்முறையால் முகத்தின் ஒரு பக்கத்தில் தற்காலிக பலவீனம் அல்லது அசைவின்மை ஏற்படுத்தும் பெல்ஸ் பால்சி நோய் தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பதிலளிக்காத குடும்பம்
மேலும், நான் சட்ட உதவியை நாடியுள்ளேன். இந்த கட்டத்தில், மேலும் கருத்து தெரிவிக்க எனக்கு உரிமை இல்லை என்றும் கூறினார்.
முஸ்கானின் இந்த குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹன்சிகா மோத்வானியோ அவரது குடும்பத்தினரோ எந்த பதிலும் இதுவரை தரவில்லை.
முஸ்கான் நான்சி ஜேம்ஸ்
முஸ்கான் ஒரு பிரபலமான இந்திய தொலைக்காட்சி நடிகை. 'தோடி குஷி தோடே கம்' என்ற நிகழ்ச்சியுடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 'மாதா கி சௌகி' நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அவர், கோட் ரெட், பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப், ஏஜென்ட் ராகவ் - கிரைம் பிராஞ்ச் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
முக முடக்கத்தால் பாதிப்பு
2022 நவம்பரில், தனக்கு பெல்ஸ் பால்சி இருப்பதாக முஸ்கான் வெளியிட்டார். இன்ஸ்டாகிராமில், "வாழ்க்கை கணிக்க முடியாதது மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்தது... சிலர் நான் எங்கே இருக்கிறேன் என்று யோசிக்கிறார்கள், சிலர் நான் எனது தொழிலை விட்டு வெளியேறிவிட்டதாக நினைக்கிறார்கள். சிலருக்கு நான் என்ன கஷ்டப்படுகிறேன் என்பது உண்மையில் தெரிந்திருக்கலாம்.
பெல்ஸ் பால்சி (முக முடக்கம்) என்ற கோளாறு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இது அதிக மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சியால் ஏற்படலாம். 70% குணமடைந்த பிறகு இது மீண்டும் வந்தது, கடந்த சில மாதங்கள் எனக்கும் என் பெற்றோருக்கும் மிகவும் மன அழுத்தமாக இருந்தது. வீங்கிய முகம் மற்றும் தாங்க முடியாத வலியுடன் எழுந்திருப்பது ஒரு கலைஞராக மிகவும் வேதனையாக இருந்தது" என்று முன்னதாக கூறியிருந்தார்.
டாபிக்ஸ்