Hanshika : தாய் தனக்கு கொடுத்த ஹார்மோன் ஊசிகள் குறித்து மனம் திறந்த ஹன்சிகா
Hanshika Motwani Wedding Drama: ஹன்சிகா மோத்வானி வேகமாக வளர அவரது தாய் அவருக்கு ஹார்மோன் ஊசிகள் போட்டது குறித்த புரளிகளுக்கு ஹன்சிகா மோட்வானி பதிலளித்துள்ளார். ஹன்சிகா மோட்வானி தனது 21 வயதில் வேகமாக வளர்வதற்கு ஹார்மோன் இன்ஜென்க்சன் எடுத்துக்கொண்டாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஹன்சிகாவின் தற்போதைய காதல் திருமண நாடகம் எப்பிசோடில், அவர் தான் வேகமாக வளர்வதற்காக ஹார்மோன் ஊசிகள் போட்டுக்கொண்டதாக வந்த வதந்திகள் குறித்து பேசியுள்ளார். ஹன்சிகாவுக்கு ஷோஹல் கட்டூரியாவுக்கும் நடந்த திருமணத்தை ஆவணப்படுத்தியுள்ள அந்த ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது எப்பிசோடில், ஹன்சிகாவும் அவரது, தாயும் அந்த வதந்தி குறித்து பேசியுள்ளனர்.
ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு தொழிலை துவக்கினார். அவர் ஷக்கலக்க பூம் பூம் மற்றும் கோய்மில்கையில் நடித்துள்ளார். அதன் பின்னர் சில ஆண்டுகளிலேயே அவர் எப்படி வேகமாக வளர்ந்துவிட்டார் என்றும், தென்னிந்திய சினிமாவில் கதாநாயகி வேடங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார் என்றும் பலர் ஆச்சர்யமடைந்தனர். ஹன்சிகாவின் தாய் அவர் வேகமாக வளர்வதற்கு ஹார்மோன் ஊசிகளை செலுத்தினார் என்று அவர்கள் நினைத்தனர்.
இதுகுறித்து அந்த ரியாலிட்டி ஷோவில் ஹன்சிகா குறிப்பிட்டுள்ளதாவது, “செலிபிரட்டியாக இருப்பதற்கான விலைதான் இது. இதை அவர்கள் எனது 21 வயதில் எழுதினார்கள். உங்களுக்கு தெரியும் நான் எது குறித்து பேசுகிறேன் என்று. அப்போது நான் அதை எடுத்திருந்தால், இப்போது நான் அதை எடுத்திருக்க முடியும். இப்போது ஒன்றுமில்லை. நான் வளர்ச்சிக்கான ஹார்மோன் ஊசிகள் எடுத்துக்கொண்டதாக பலரும் எழுதினார்கள். எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, பின்னர் நான் நடிகையானேன். நான் பெரிய பெண்ணாக வளர்வதற்காக எனது தாய் எனக்கு ஹார்மோன் ஊசிகள் கொடுத்ததாக அனைவரும் கூறினார்கள்.
அது உண்மையாயிருந்தால், நான் டாட்டா, பிர்லாவைவிட பணக்காராக இருந்திருப்பேன் என்று அவரது தாய் கூறுகிறார். அது உண்மையென்றால் நீங்களும் என்னிடம் வந்து உயரமாக வளருங்கள், இதுபோல் எழுதுபவர்களை நினைத்து நான் ஆச்சரியப்படுவது என்னவென்றால், அவர்களுக்கு அறிவே இருக்காதா? நாங்கள் பஞ்சாபி குடும்பத்தினர் எங்கள் மகள் 12 முதல் 16 வயதில் நடித்தார்.
இந்த திருமண விழா ஆவணம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பபடுகிறது. அதன் முதல் எபிசோடில் ஹன்சிகாவும், ஷோயலும் அவர்களின் திருமணம் குறித்த சர்ச்சைகள் குறித்து பேசியிருந்தார்கள். சமூக வலைதளங்களில் ஹன்சிகா திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் அவரது தோழியின் கணவர் என்ற தகவல் பரவியிருந்தது. அவர்கள் குடும்பத்தை உடைத்ததற்காக பலர் என்னை திட்டினார்கள். “எனக்கு அவரை ஏற்கனவே தெரியும் என்பதற்காக அது என் குற்றமல்ல. எனக்கும், அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் பொதுவாழ்க்கையில் உள்ள நபர் என்பதால் மக்கள் என்னை வில்லியைப்போல் சித்தரிப்பது எளிதான ஒன்று. இவைதான் செலிபிரட்டியாக இருப்பதற்கு நான் கொடுக்கும் விலை“ என்று ஹன்சிகா அதில் பேசியிருந்தார்.
டாபிக்ஸ்