Hailey bieber: வினையான விவாகரத்து வதந்தி..அவ்வளவு மோசமா உணர வச்சு’..6 மாத கர்ப்பதை மறைத்தது ஏன்?’ - ஹெய்லி பீபர் பேட்டி!
Hailey bieber: கணவரும், பாடகருமான ஜஸ்டின் பீபருடனான தனது உறவு பற்றிய வதந்திகள் குறித்தும், ஆரம்பத்தில் தனது கர்ப்பத்தை ரகசியமாக வைத்திருந்ததிற்கான காரணம் குறித்தும் ஹெய்லி பீபர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

மாடல் அழகியான ஹெய்லி பீபர், பிரபல பாடகரும், கணவருமான ஜஸ்டின் பீபருடனான உறவு குறித்தும், தன்னுடைய கர்ப்பத்திற்கு முன்னமே, தாங்கள் விவாகரத்து செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து டபிள்யூ இதழுக்கு அளித்த பேட்டியில், ஜஸ்டின் உடனான உறவு குறித்த மக்களின் விமர்சனம், தன்னை காயப்படுத்தியதாக கூறினார்.
என்னை மிகவும் மோசமாக உணர வைத்துள்ளனர்.
இது குறித்து அவர் பேசும் போது, “ நாங்கள் பழகிய முதல் நாளில் இருந்தே மக்கள், எங்களது உறவை பற்றி, என்னை மிகவும் மோசமாக உணர வைத்துள்ளனர். அவர்கள் பிரியப்போகிறார்கள். இருவருக்குள்ளும் வெறுப்பு வந்து விட்டது. சீக்கிரமே விவாகரத்து பெறப் போகிறார்கள். இது எப்படி இருந்தது என்றால், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை மக்கள் நம்பமாட்டார்கள் என்று எண்ண வைத்தது.
அது, என்னை பாதிக்காதது போல நான் முடிந்த அளவு நடித்தேன். ஒரு கட்டத்தில் இதுதான் சொல்லப்பட போகிறது. நீங்கள் அதற்கு பழகிவிட்டீர்கள். அதைத்தான் கூறப்போகிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ஆனால்உண்மையில் அது, எந்த வலியையும் குறைக்காது என்பதை நான் உணர்கிறேன்.” என்று பேசினார்.