'எந்த பயனும் இல்லை’: குஷ்பூ அக்கவுன்ட்டை ஹேக் செய்து மொக்கை வாங்கிய ஹேக்கர்ஸ்.. வடிவேலு காமெடி பாணியில் நடந்த கூத்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'எந்த பயனும் இல்லை’: குஷ்பூ அக்கவுன்ட்டை ஹேக் செய்து மொக்கை வாங்கிய ஹேக்கர்ஸ்.. வடிவேலு காமெடி பாணியில் நடந்த கூத்து!

'எந்த பயனும் இல்லை’: குஷ்பூ அக்கவுன்ட்டை ஹேக் செய்து மொக்கை வாங்கிய ஹேக்கர்ஸ்.. வடிவேலு காமெடி பாணியில் நடந்த கூத்து!

Marimuthu M HT Tamil Published Apr 19, 2025 08:48 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 19, 2025 08:48 PM IST

குஷ்பூ அக்கவுன்ட்டை ஹேக் செய்து மொக்கை வாங்கிய ஹேக்கர்ஸின் செயல்பாடு இணையத்தில் வைரல் ஆகியிருக்கிறது.

'எந்த பயனும் இல்லை’: குஷ்பூ அக்கவுன்ட்டை ஹேக் செய்து மொக்கை வாங்கிய ஹேக்கர்ஸ்.. வடிவேலு காமெடி பாணியில் நடந்த கூத்து!
'எந்த பயனும் இல்லை’: குஷ்பூ அக்கவுன்ட்டை ஹேக் செய்து மொக்கை வாங்கிய ஹேக்கர்ஸ்.. வடிவேலு காமெடி பாணியில் நடந்த கூத்து!

நடிகை குஷ்பூவின் எக்ஸ் தளக்கணக்கு, சமீபத்தில் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் அதனை ஆராய்ந்து பார்த்த ஹேக்கர்கள் அதிர்ச்சிகரமான பதிலை, நடிகை குஷ்பூவிற்கு அனுப்பியிருக்கின்றனர். இது வடிவேலுவின் காமெடி பாணியில் சிரிப்பினை உண்டாக்கியிருக்கிறது

இதுதொடர்பாக நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஸ்க்ரீன் ஷாட் செய்தியின் மூலம், ஹேக்கர்கள் நடிகை குஷ்பூவின் எக்ஸ் தளக்கணக்கை முற்றிலுமாக ஆராய்ந்து பார்த்து, அதில் ஒன்றுமில்லாததால், அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கே மெசேஜ் செய்து புலம்பியிருக்கின்றனர்.

அந்த வாட்ஸ்அப் உரையாடலில், ‘ஹாய் குஷ்பூ’ என அந்த உரையாடல் தொடங்குகிறது. அதற்கு குஷ்பூ, ‘மன்னிக்கவும். யார் நீங்கள், உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்கிறார்.

‘எந்தப் பயனும் இல்லை’: புலம்பிய ஹேக்கர்

அதற்குப் பதிலளித்த ஹேக்கர்ஸ் டீம், ‘நான் உன் எக்ஸ் கணக்கை ஹேக் செய்தேன். ஆனால், உங்கள் எக்ஸ் தளக் கணக்கினால், எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்து இருக்கிறது. இது கரடியே காரித்துப்பியது போல் இருக்கிறது என்ற வடிவேலு காமெடியை இந்நிகழ்வு நினைவுபடுத்துவதாக, நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக நடிகை குஷ்பூ கூறியிருக்கும் தகவலில், ‘என்னுடைய அலுவலகத்திற்கு ஹேக்கர்ஸிடம் இருந்து மெசேஜ் வந்தது. இது நிறைய ஹேக்கர்ஸ் இங்கிலாந்தில் பதுங்கியிருப்பதைக் காட்டுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக நெட்டிசன்கள் பலரும் சிரிப்பு எமோஜியைப் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன், ‘’நாடகத்தை உருவாக்குவதற்குப் பதிலாக சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளிக்கவும்’’ என கருத்து கூறியிருக்கிறார்.

யார் இந்த குஷ்பூ?:

மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவரான நடிகை குஷ்பூவின் நிஜப்பெயர் நகத் கான். இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானபோது, குஷ்பூ என்ற பெயர் இவருக்கு வைக்கப்பட்டது. 1980 முதல் 85 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்ற பலரது கவனத்தை ஈர்த்தார்.

தனது டீன் ஏஜ் வயதில் 1986-ல் வெளியான ’கலியுக பாண்டவலு’ என்ற தெலுங்கு படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்மத்தின் தலைவன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்த பிரபுவின் ஜோடியாக குஷ்பூ தோன்றியிருப்பார். அதன் பின் பாசில் இயக்கத்தில் வெளியான ’வருஷம் 16’ என்ற திரைப்படத்தில் சோலோ நாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து தமிழ் மக்களின் மனதில் குடிபுகுந்தார்.

இதன் பின்னர் 1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் சினிமாக்களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். மார்கெட்டில் உச்சத்தில் இருந்தபோதே இயக்குநர் சுந்தர். சியை காதலித்து திருமணம் செய்து கொண்டு தமிழ்நாடு மருமகள் ஆனார்.

குஷ்பூவுக்கு கோயில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் தமிழ்நாட்டில் இருந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே நடிகைகளிலேயே கோயில் கட்டப்பட்ட ஒரே நடிகை என்ற பெருமையை பெற்றார். அத்துடன் குஷ்பூவின் குண்டான தோற்றத்தை ஒத்து, ‘குஷ்பூ இட்லி’ என்ற பெயரில் தயாரித்து உண்டு, தமிழக மக்கள் கொண்டாடினார்கள்.