GVPrakash:'பாடல் விமர்சனத்தை ஏற்பேன்.. பெர்ஷனல் விமர்சனத்தை எல்லோரிடமும்போய் விவரிக்கமுடியாது’: ஜி.வி.பிரகாஷ் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gvprakash:'பாடல் விமர்சனத்தை ஏற்பேன்.. பெர்ஷனல் விமர்சனத்தை எல்லோரிடமும்போய் விவரிக்கமுடியாது’: ஜி.வி.பிரகாஷ் பேட்டி

GVPrakash:'பாடல் விமர்சனத்தை ஏற்பேன்.. பெர்ஷனல் விமர்சனத்தை எல்லோரிடமும்போய் விவரிக்கமுடியாது’: ஜி.வி.பிரகாஷ் பேட்டி

Marimuthu M HT Tamil Published Feb 28, 2025 11:11 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 28, 2025 11:11 AM IST

GVPrakash: நடிகராக 25ஆவது படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளித்திருக்கிறார்.

GVPrakash:'பாடல் விமர்சனத்தை ஏற்பேன்.. பெர்ஷனல் விமர்சனத்தை எல்லோரிடமும்போய் விவரிக்கமுடியாது’: ஜி.வி.பிரகாஷ் பேட்டி
GVPrakash:'பாடல் விமர்சனத்தை ஏற்பேன்.. பெர்ஷனல் விமர்சனத்தை எல்லோரிடமும்போய் விவரிக்கமுடியாது’: ஜி.வி.பிரகாஷ் பேட்டி

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், பின் நடிகராகவும் ஆகி, 25 படங்களை நடித்து முடித்துவிட்டார். அவரது 25ஆவது படமாக கிங்ஸ்டன் மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் மாஸ்டர் இன்ஸ்பையரர்ஸ் வித் கோபிநாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜி.வி.பிரகாஷ், தொகுப்பாளர் கோபிநாத்தின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அது பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில், பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. அதன் தொகுப்பு:-

’அம்மா இசைத்துறையைச் சார்ந்தவர். மாமா ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்துறையைச் சார்ந்தவர். ஆனால், ஜி.வி.பிரகாஷ் அதைப்பயன்படுத்தி வந்தது மாதிரி தெரியலையே?

அப்படி ஈஸியாக ஒன்று கிடைச்சிடக்கூடாதுன்னு ஒன்று. இல்லையென்றால், அது நார்மலாக நெப்போட்டிசம் உள்ள போயிடும். எனக்கு வாய்ப்பு வந்து யாரும் வாங்கிக்கொடுக்கல. நானே வந்து விளம்பரங்கள் செய்தேன். நானே வந்து என்னுடைய பள்ளி இசைக்குழுவில் இருந்தேன். நானே போய் என்னுடைய பாடல்களைப் பல இடங்களில்போய் கொடுத்தேன். நான் செய்த விளம்பரம் மற்றும் பாடல்களைக் கேட்டு எனக்குப் படம் கிடைத்தது. நீங்கள் தகுதியானவர்களாக இல்லையென்றால், இந்தத்துறையில் நீடிக்கமுடியாது இல்லையா. அதை இருபது வருஷமாகப் பண்ணிட்டு இருக்கேன். நான் பந்தயத்தை எல்லாம் நம்புறது இல்லை. ஆனால், அந்த பந்தயத்தில் என் இடத்தை தக்க வைச்சுக்குவேன். இருக்கிற ஆட்கள் மாறிக்கிட்டே வருவாங்க. ஆனால் எப்போதும் அந்த துறையில் இருந்திட்டே இருக்கணும்.

பெர்ஷனல் விஷயங்களில் வரும் விமர்சனத்தையும், சமூகம் சார்ந்து நீங்கள் இயங்கும்போது வரும் விமர்சனத்தையும் எப்படி கையாளுறீங்க?

நாம் எப்போதுமே அந்த விமர்சனத்தில் சிக்கிக்கொண்டு நின்றுவிடக்கூடாது. அடுத்தவங்க நம்மை என்னை நினைக்கிறாங்கன்னு யோசிச்சிட்டே இருந்தால், அடுத்தவங்களை நாம் இம்ப்ரெஸ் செய்றதுக்காகவே வாழ்ந்துட்டு இருந்தால், அதுக்கே நம் வாழ்க்கை போயிடும். மத்தவங்களை நான் ஏன் இம்ப்ரெஸ் செய்யணும். இதுதான் நான். அவ்வளவுதான். எனக்குள் ஒரு தராசு இருக்கு. அதன்படி, நான் சரியாக நடக்கிறேன்.

அரசியலாகப் பின்னணியில் எதுவும் நடக்கிறதா என்று பார்த்துவிட்டு, நமக்குத்தோணுச்சு என்றால் நமது கருத்தை வாய்ஸ் அவுட் செய்யணும்.

கேரியரில் நீங்கள் பிஸியாக இருந்தாலும், நீங்கள் விமர்சனத்துக்குள் சிக்கிடுறீங்களோன்னு தோணுது?

அது உண்மையிலேயே தேவைப்படுகிறது என்றால், அந்த விமர்சனத்தை எடுத்துக்கொண்டு, நம்மை நாம் சரிசெய்துகொள்ளலாம். ஒரு பாடலில் விமர்சனம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். இதுவே பெர்ஷனல் விமர்சனம் என்றால் அதை எல்லார்கிட்டேயும் போய் விவரிச்சிட்டு இருக்கமுடியாது. நான் ஏன் சொல்லணும். பெர்ஷனல் என்பது பெர்ஷனல்.

அரசியல் சார்ந்து ஒரு கருத்து சொல்கிறேன் என்றால், உடனே சிலர் நினைப்பார்கள், இவர்களுக்கு அரசியல் சார்ந்த பின்னணி இருக்கு என்று. ஆனால், அப்படி எனக்கு எந்த ஒரு அரசியல் ஆதரவும் பின்னணியும் கிடையாது.

ஜி.வி.பிரகாஷ் என்றாலே மெலடி கிங் என்று தான் சொல்கிறார்கள்? அதுபற்றி?

அதுக்கு என்ன காரணம் என்றால் எமோஷன் தான். ஒரு எளிமையான வொர்க் ஆகுற எமோஷனை கொடுத்தால், அதைத்தாண்டி எதுவுமே கிடையாது. அது தான் கிளாஸிக் ஃபார்ம்ன்னு சொல்லுவாங்க.

நீங்கள் பட்டியல் இடும் உங்கள் பாடல்கள் என்பது என்ன?

எனக்கு அங்காடி தெரு படத்தில், கதைகளைப் பேசும் விழி அருகே பாடல் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நல்லாயிருக்கும் முத்துக்குமாருடைய வரிகளும், அந்த டியூனுமே. அது எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல். உன் பேரை சொல்லும்போதே, அன்பே அன்பே, பிறைதேடும் இரவிலே இந்தப் பாடல்கள் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

பிறைதேடும் இரவிலே பாடலின் கம்போஸிங் எப்படி நடந்தது?

பிறைதேடும் இரவிலே பாடல் பதிவின்போது, செல்வராகவன் சார் ஊரில் இல்லை. கேரளாவில் இருந்தார். போன் பண்ணி, ஒரு பாட்டு பண்ணிக்கொடுன்னு சொன்னார். அன்று நீ செய்றதுதான், பாட்டுன்னு சொன்னார். உடனே, பி.ஜி.எம் எல்லாம் போட்டு அனுப்பிவைச்சேன். அதைக்கேட்டுட்டு தனுஷ் மறுநாள் பாட்டை எழுதி அனுப்பிச்சார். அப்படியே ரெக்கார்டிங் பண்ணிட்டோம். அந்த ஆல்பமே ரொம்ப ஃபாஸ்ட்டாக பண்ணுனோம். மயக்கம் என்ன படத்தின் ரீ-ரெக்கார்டிங்கே 6 நாட்களில் வாசிச்சிட்டோம்.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களைக் கொண்டாடுவதுபோல், அவருடைய பின்னணியைக் கொண்டாடுவதில்லையே?

இப்போது என்னுடைய பின்னணி இசையைக் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. ஆயிரத்தில் ஒருவனில் இருந்தே, இப்போது எடுத்து செலிபிரேட் பண்றாங்க’ என முடித்தார், ஜி.வி.பிரகாஷ்.

நன்றி: பிஹைண்ட்வுட்ஸ் டிவி