'குட் பேட் அக்லி பட இசையை 30 நாட்களில் முடித்தேன்.. மண்டாடி படத்தின் இசையை 10 நாட்களில் முடித்தேன்’: ஜி.வி. பிரகாஷ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'குட் பேட் அக்லி பட இசையை 30 நாட்களில் முடித்தேன்.. மண்டாடி படத்தின் இசையை 10 நாட்களில் முடித்தேன்’: ஜி.வி. பிரகாஷ்

'குட் பேட் அக்லி பட இசையை 30 நாட்களில் முடித்தேன்.. மண்டாடி படத்தின் இசையை 10 நாட்களில் முடித்தேன்’: ஜி.வி. பிரகாஷ்

Marimuthu M HT Tamil Published Apr 19, 2025 11:07 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 19, 2025 11:07 PM IST

நடிகர் சூரி நடித்த மண்டாடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பட அனுபவங்களை நகைச்சுவையாகப் பகிர்ந்தார்.

'குட் பேட் அக்லி பட இசையை 30 நாட்களில் முடித்தேன்.. மண்டாடி படத்தின் இசையை 10 நாட்களில் முடித்தேன்’: ஜி.வி. பிரகாஷ்
'குட் பேட் அக்லி பட இசையை 30 நாட்களில் முடித்தேன்.. மண்டாடி படத்தின் இசையை 10 நாட்களில் முடித்தேன்’: ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்ஃபி என்னும் படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர், மதிமாறன் புகழேந்தி. இவர் இயக்கும் இரண்டாவது படம், ’மண்டாடி’. இப்படத்தை விடுதலை, கொட்டுக்காளி ஆகியப் படங்களில் கதையின் நாயகனாக நடித்த சூரி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ராமநாதபுரத்தில் கடற்கரையோர கிராமங்களில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்கும் வீரர் முத்துக்காளியாக நடித்திருக்கிறார். அவர் அணிந்திருக்கும் ஜெர்சியின்மூலம், அவரது அணியின் பெயர், ‘முகவை மைந்தன்ஸ்’ எனத் தெரிகிறது. மிக முக்கியமாக தெலுங்கில் ’கலர் போட்டோ’ என்னும் தேசிய விருது பெற்ற படத்தில் ஹீரோவாக நடித்த சுஹாஸ் என்னும் ஹீரோ தமிழில் இப்படம் மூலம் தமிழ் நடிகராக அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவினை எஸ்.ஆர்.கதிரும் படத்தொகுப்பினை பிரதீப் ஈ.ராகவ்வும் செய்ய இசையினை ஜி.வி.பிரகாஷ் குமார் செய்திருக்கிறார். படைப்பாக்கத் தயாரிப்பாளராக வெற்றிமாறன் இருக்க, மண்டாடி படத்தை எல்ரெட் குமார் முழுவதுமாக தயாரிக்கிறார்.

சூரியின் 'மண்டாடி' பட அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய, நடிகர் சத்யராஜ், காணொலி வாயிலாக வந்து வாழ்த்து தெரிவித்தார்.

'பார்த்ததும் பிரமிச்சுப்போயிட்டேன்’: சத்யராஜ்

அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், 'கதையைச் சொல்றதுக்காக படத்தின் இயக்குநர் மதிமாறன் வீட்டுக்கு வந்திருந்தார். படத்தோட கதையைச் சொல்றதுக்கு முன்னாடி, இந்தப் படம் எந்த மாதிரி படம்ன்னு சொல்றதுக்காக ஒரு மேக்கிங் வீடியோ காட்டினார். பார்த்ததும் பிரமிச்சுப்போயிட்டேன். தமிழ்நாட்டில் இப்படி ஒரு படகு பந்தயம் ராமேஸ்வரம் ஏரியாவில் ஒரு நடக்குதுன்னு காட்டினார். மனசுக்குள் இந்த கதை எவ்வளவு சுமாராக இருந்தாலும் நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அடுத்து கதையைச் சொன்னார். கதையும் நல்லாயிருந்தது. என் கேரக்டரும் ரொம்ப பிரமாதமாக இருந்தது. இதை ரிசர்ச் பண்ணி சொல்றார், இயக்குநர் மதிமாறன். இந்தக் கதையை எடுக்கிறதுக்கு எவ்வளவு செலவாகும்ன்னு தெரியும். அதை தயாரித்த எல்ரெட் சாருக்கும், கிரியேட்டிவ் புரொடியூசர் வெற்றிமாறன் சாருக்கும் வாழ்த்துகள்.

கடுமையாக உழைத்து நல்ல கதாநாயகன் அந்தஸ்துக்கு வந்திருக்கும் அன்புத்தம்பி சூரி. சூரியோட கெட்டப் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. பீட்டர் ஹெயின் ஸ்டன்ட் மாஸ்டராக இருக்கிறார். இப்படம் வெற்றிபெற சராசரி சினிமா ரசிகனாக வாழ்த்துகள்’’ என நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.

மண்டாடி படத்தைப் பற்றிப்பேசிய படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ‘’ செம புது முயற்சியாக இருக்கு, இந்த விசுவல்ஸ். மதி வந்து வெற்றிமாறன்மூலம் தான் பழக்கம். ஆடுகளம் போஸ்ட் புரொடக்‌ஷன்னு நினைக்கிறேன். அதில் இருந்து, எனக்கு மதி எனக்கு பழக்கம். வெற்றிகிட்டயிருந்து வந்த பிரைட் ஸ்டுடண்ட் மதிமாறன். ஒரு நட்பு இருந்துக்கிட்டே இருந்துச்சு. குட் பேட் அக்லி படமே 30 நாட்களில் மியூஸிக் செஞ்சு முடிச்சேன். அந்த மாதிரி, கடைசி ஒரு 10 நாட்களில் கொடுத்து ‘மண்டாடி’படத்தின் இசையை முடிக்கச் சொன்னாங்க. அதனால் அப்படி 10 நாட்களில் மண்டாடி படத்தின் இசையை முடித்தேன்.

’கதிர் சாருடைய சுப்பிரமணியபுரம் ஒளிப்பதிவு பிடிக்கும்’: ஜி.வி. பிரகாஷ்

வெற்றிமாறன் கூட ஒரு இருபது ஆண்டுகள் பயணம் இருக்கு. நாங்கள் இரண்டுபேருமே சேர்ந்து வளர்ந்திருக்கோம். எல்ரெட் சார் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல், அவருடைய முதல் டைரக்‌ஷன் படமான ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்துக்கு நான் மியூஸிக் செய்து கொடுத்தேன். இன்னிவரைக்கும் அந்தப் பாடல்கள் மெமரபிளாக இருக்கு. சில படத்துக்கு டைம் தாண்டி, அந்தப் படத்தின் பாடல்கள் நிற்கும். அப்படி அவரது படத்தில் சில பாடல்கள் அமைஞ்சது. கதிர் சாருடைய சுப்பிரமணியபுரம், கற்றது தமிழ் படங்களில் இருக்கும் ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கும். முதன்முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறோம்.

சூரி சார், அவர் ஹீரோவாக ஆனவுடன் கருடன் பண்ண வேண்டியது மிஸ் ஆச்சு. மாமன் பண்ணவேண்டியது மிஸ் ஆச்சு. அப்புறம் ‘மண்டாடி’ படத்தில் தான் சேருகிறோம். ரொம்ப சந்தோஷம் உங்களுடன் வொர்க் செய்றது’’ எனத் தெரிவித்தார்.