GV Prakash New movie release date: 'சிவப்பு சட்டை அணிந்து புரட்சி'- ஜி.வி.பிரகாஷின் புதிய பட ரிலீஸ் தேதி இதோ!
Kollywood news: அறிமுக திரைப்பட இயக்குநரான நிகேஷ் ஆர்எஸ் இயக்கத்தில், வரவிருக்கும் திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார், இது அவரது தமிழ் படம் ஆகும்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ரெபெல் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பைப் பகிர்ந்து கொண்ட நடிகர்-இசையமைப்பாளர், "2024 ஆம் ஆண்டுக்கான எனது முதல் வெளியீடு. புரட்சியைத் தூண்டுவதற்கு தயாராக உள்ளது. மார்ச் 22 முதல் திரையரங்குகளில் கண்டு ரசியுங்கள்" என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது X இல் பகிர்ந்த வீடியோ, ஜி.வி.பிரகாஷ் ஒரு மாணவராக தனது சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கத் தயாராகி வருவதைக் காட்டுகிறது. “பேனா எடுத்துட்டு போய் படிக்கும் காலம் இதுவல்ல” என்கிறார். தொடர்ந்து வரும் காட்சிகள், நடிகர் ஒரு குழு மாணவர்களுடன் சிஸ்டத்திற்கு எதிராக 'கிளர்ச்சி' செய்யச் செல்வதைக் காட்டுகிறது" என்கிறார். அவர் சிவப்பு நிற சட்டை அணிந்திருக்கிறார்.
அறிமுக திரைப்பட இயக்குநரான நிகேஷ் ஆர்எஸ் இயக்கத்தில், வரவிருக்கும் திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார், இது அவரது தமிழ் படம் ஆகும்.
இயக்குனர் நிகேஷ் கேரளாவின் மூணாறை சேர்ந்தவர். இது நகரத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு பீரியட் படம். அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து படம் இருக்கும். ரெபெல் தமிழ் மக்களுக்கான படமாக இருக்கும். இது சொல்லப்பட வேண்டிய முக்கியமான கதையாகும், மேலும் இது பல ஆண்டுகளுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று சினிமா எக்ஸ்பிரஸ் தளத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்ஷன்-டிராமா வகையின் கீழ் வரும் இப்படம், காதல், நகைச்சுவை மற்றும் அரசியல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், மமிதா இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். இப்படத்தில் கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் ராதாகிருஷ்ணன் (ஒளிப்பதிவாளர்) மற்றும் வெற்றி கிருஷ்ணன் (எடிட்டர்) ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். படம் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.
டாபிக்ஸ்