GV Prakash Saindhavi: தமிழர் மாண்பு எங்க போச்சு.. அத்துமீறி நுழைறீங்க... செருப்படி பதில் கொடுத்த ஜிவி!
GV Prakash Saindhavi:தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனி நபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...? என ஜி. வி.பிரகாஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

GV Prakash Saindhavi: நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு, ஜி. வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பிரிந்து உள்ளனர்.
பள்ளி நாட்களில் இருந்தே காதலித்து வந்த ஜி. வி. பிரகாஷ், சைந்தவி, கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் தேதியன்று சென்னையில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு தங்களின் பெண் குழந்தையை வரவேற்றனர்.
கற்பனையாக வலம் வந்த காரணங்கள்
இப்படி இருக்கும் நிலையில் திடீரென ஜி. வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பிரிந்து வாழ முடிவு செய்தது பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. தாங்கள் பிரிந்து செல்கிறோம் என அறிவித்த இவர்கள் எதனால் பிரிக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை.
இதன் காரணமாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கற்பனைக்கு ஏற்ப ஜி. வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பிரிந்தது தொடர்பாக பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாமல் ஜி. வி. பிரகாஷ் இந்த விஷயத்திற்கு முடிவு கட்டும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.
செருப்படி பதில் கொடுத்த ஜி. வி. பிரகாஷ்
இது தொடர்பாக அவர் வெளியீட்டு இருக்கும் பதவில், “ புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொது வெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.
தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது " யாரோ ஒரு தனி நபரின் " வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..?
இருவரும் பரஸ்பரம் ஒப்பு கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள். உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது.
தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்
என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களில் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி " எனக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்