Gurusomasundaram: “கடவுளை கூட அவன் இவன் என்கிறோம்..” மிஷ்கின் பேச்சுக்கு வித்தியாசமாக முட்டு கொடுத்த நடிகர்
Gurusomasundaram on Mysskin Speech: கடவுளை கூட அவன் இவன் என்கிறோம். மிஷ்கின் பேச்சில் தவறும் உள்ளது. அவர் கெட்டவார்த்தை பேசியதற்கு நான் சப்போர்ட் பண்ணல என்று நடிகர் குரு சோமசுந்தரம் கூறியுள்ளார்.

குட் நைட், லவ்வர் படங்களை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பி ஜனவரி 24 (நாளை) வெளியாக இருக்கும் படம் குடும்பஸ்தன். இந்த படத்தின் ட்ரெய்லர் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ப்ரிவியூ காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசந்தரம், பாட்டில் ராதா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குநர் மிஷ்கின் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
இதைத்தொடர்ந்து மிஷ்கின் பேச்சுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். மேடை நாகரிகம் அறிந்து அவர் பேச வேண்டும் என்று கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்
மிஷ்கினின் சர்ச்சை பேச்சு குறித்து குடும்பஸ்தான் படத்தின் ப்ரிவியூ ஷோ பார்க்க வந்த குரு சோமசுந்தரத்திடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் மிஷ்கின் பேச்சுக்கு வித்தியாசமான விளக்கம் அளித்தார்.
கடவுளை கூட அவன் இவன் என்கிறோம்
இதுகுறித்து நடிகர் குரு சோமசுந்தரம் கூறியதாவது, "அவரது பேச்சை ரெண்டு விதமா பார்க்கிறேன். இதில் தவறும் உள்ளது. உயர்ந்த விஷயங்களை, கடவுளை கூட நாம் அவன் இவன் என்கிறோம். என்னடா இப்படி என்ன படுத்துற என சாமியை சொல்வோம்.
கெட்டவார்த்தைக்கு சப்போர்ட் பண்ணல
இளையராஜா ஜீனியஸ்களுக்கெல்லாம் ஜீனியஸ். அவர் மரியாதையெல்லாம் தாண்டியவர். கெட்டவார்த்தை பேசியதற்கு நான் சப்போர்ட் பண்ணல. சில சமயங்களில் பயங்கரமான வேலையை பார்த்தவர்களிடம் என்னடா இப்படி பன்னிட்டீயேடா என ஆச்சர்யமாக சொல்வோம் இல்லையா.
அந்த நேரத்தில் சொல்லும் டா, இவன் போன்ற வார்த்தைகள் மரியாதை குறைவானது இல்லை. அதுபோலத்தான் இதுவும்" என்றார்.
ஒரே நாளில் வெளியாகும் குடும்பஸ்தன், பாட்டில் ராதா
மணிகண்டன், சான்வே மேகானா, குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து காமெடி கலந்த பேமிலி படமாக உருவாகியிருக்கும் குடும்பஸ்தான் படத்தை ராஜேஷ்வர் கலைசாமி இயக்கியுள்ளார். ருமணமாகி குடும்ப வாழ்க்கையை எதிர்கொள்ள மிடில்கிளாஸ் கணவனாக வரும் ஹீரோ சந்திக்கும் விஷயங்களை கலகலப்பான எதார்த்த காமெடி காட்சிகளோடு அமைந்திருந்த இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் காமெடி ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் படம் பாட்டில் ராதா. குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன், ஜான் விஜய் உள்பட பலரும் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - ஷான் ரோல்டன். கடந்த 18ஆம் தேதி படத்தின் இசை வெளியீடு நடைபெற்ற நிலையில், தொடர்ந்து ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. அதீத குடிபழக்கத்தால் குடும்பஸ்தான ஹீரோ சந்திக்கும் பிரச்னையைும், குடியிருந்து அவர் எப்படி விடுபடுகிறார் என்கிற கதையம்சத்திலும் உருவாகியிருப்பதாக கூறப்படும் பாட்டில் ராதா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்ததுடன் படம் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் ரிலீஸ்களுக்கு பின் ஒரு வரை இடைவெளி விட்டு குடும்பஸ்தன், பாட்டில் ராதா ஆகிய இரு படங்களும் ஜனவரி 25 என ஒரே நாளில் வெளியாகின்றன.

தொடர்புடையை செய்திகள்