Guntur Kaaram on OTT: மகேஷின் மாஸ் மசாலா.. குண்டூர் காரம் ஓடிடி ரிலீஸ் தேதி இங்கே!
குண்டூர் காரம் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்தை இயக்கியதின் மூலமாக கவனம் பெற்றவர் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவரது இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான திரைப்படம் குண்டூர் காரம்.
இந்தப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளரான தமன் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
150 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்பட்ட இந்தப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்த நிலையில் குண்டூர் காரம் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி குண்டூர் காரம் திரைப்படம் வருகிற 9 ம் தேதியன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்