தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: ஏன் இந்த மாதிரி.. மேடையிலேயே சம்பவம்.. திருச்சி சாதனா, பயில்வானை விளாசிய நபர் யார்?

Bayilvan: ஏன் இந்த மாதிரி.. மேடையிலேயே சம்பவம்.. திருச்சி சாதனா, பயில்வானை விளாசிய நபர் யார்?

Aarthi Balaji HT Tamil
Jun 28, 2024 09:01 AM IST

Bayilvan: விரைவில் திரைக்கு வரவுள்ள அறம் செய் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ( ஜூன் 27) நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

மேடையிலேயே சம்பவம்.. திருச்சி சாதனா, பயில்வானை விளாசிய நபர் யார்?
மேடையிலேயே சம்பவம்.. திருச்சி சாதனா, பயில்வானை விளாசிய நபர் யார்?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்தில் நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகியோர் நடித்து உள்ளனர். மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள அறம் செய் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ( ஜூன் 27) நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

காலம் அப்படி மாறி இருக்கிறது

விழாவில் குணா பேசுகையில், ” திருச்சி சாதனா என்னுடைய உணர்வுகளை நான் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். அந்த காலத்தில் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்றால் கூட கணவரை திரும்ப சொல்வார்கள் பெண்கள். ஆனால் இன்று யூ - டியூப்பில் அனைத்துமே காண்பிக்கிறார்கள். காலம் அப்படி மாறி இருக்கிறது.

திருச்சி சாதனா தனது யூ - டியூப்பில் தனக்கு என்று ஃபாலோயர்கள் உருவாக்கி அவர் ஊரில் பெரிய வீடு கட்டி உள்ளார்.

தனிப்பட்ட சுதந்திரம்

ஆனால் அதே சமயம் வயலில் ஓபனாக குளிப்பது அதை வீடியோவாக வெளியீட்டு இருக்கிறார். அதை அனைவரும் பார்க்கிறார்கள். நானும் தான். அது உங்கள் தனிப்பட்ட சுதந்திரம். இது போன்ற வீடியோக்கள் வெளியீடுவதற்கு பதிலாக  நீட் தேர்வு, சாலை ஒழிப்பு தொடர்பான வீடியோகளை பதிவிட்டால் இன்னும் அவருக்கு லட்சம் நபர்கள் சமூக வலைதளங்களில் உங்களை பின் தொடருவார்கள். அதை தான் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

பயில்வான் ரங்கநாதனுக்கு வேண்டுகோள்

உங்கள் மேல் இந்த சமூகம் நல்ல பார்வை கொண்டு வரும். அதே போல் தான், பயில்வான் ரங்கநாதனுக்கும் ஒரு வேண்டுகோள். சினிமாவில் இருப்பது மாற வேண்டும். நான் பார்க்கவில்லை, ஆனால் கேள்விப்பட்ட விஷயங்களை சொல்கிறேன் என சொல்கிறார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் தொடர்பாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்யலாம்.

சமூகம் சார்ந்த விஷயங்கள்

 அது தொடர்பான விழிப்புணர்வு செய்யலாமே. சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுக்கலாம். அறம் என படத்தின் தலைப்பு இருப்பதால் தான் நான் இவை அனைத்தையும் பேசுகிறேன். மற்றவர்கள் போல் வந்து படம் நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டு என்னால் போக முடியாது. சமூகத்திற்கு ஏதேனும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் ” என்றார்.

இவர் பேசுவதை கேட்டு காதை பொத்திக்கொண்ட பயில்வான் ரங்கநாதன் அமர்ந்து இருந்தார். திருச்சி சாதனா தனக்கு அதில் தொடர்பு இல்லை என்பது போல் அவரை நக்கலாக பார்வை பார்த்து அமர்ந்து இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலை வாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.