MTV Splitsvilla X5: சன்னி லியோன் ஷோவுக்கு திடீரென வந்த ஊர்வசி ரவுத்தேலா! இந்த வார ஸ்ப்ளிட்ஸ்வில்லா X5 எப்படி இருந்தது?
சன்னி லியோன் ஸ்பிளிட்ஸ்வில்லா ஷோவுக்கு திடீரென வந்த ஊர்வசி ரவுத்தேலா, போட்டியாளர்களுக்குள் சில வித்தியாசமான போட்டிகளை நடத்த கலகலப்பூட்டினார். நீச்சல் குள போட்டி ஒன்றை வைத்து வெற்றியாளர் முடிவு செய்யப்பட்டனர்.

எம் டிவி மற்றும் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 நிகழ்ச்சி, தமிழ் மொழியிலும் இந்த முறை ஒளிபரப்பாகி நம்ம ஊர் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து வருகிறது.
பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களை சன்னி லியோன் தமிழில் தொகுத்து வழங்கும் டேட்டிங் ஷோவாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை ஜியோ சினிமாவில் ஸ்டீரிம் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காதலர்களுக்கு இடையே நடக்கும் அன்பு பரிமாற்றம், ஊடல், சண்டை, பிரேக்கப் என ஏகப்பட்ட உணர்ச்சிகளுடன் விளையாடப்படும் இந்த ரியாலிட்டி ஷோவில் ஒவ்வொரு எபிசோடுகளிலும் நிகழும் சுவாரஸ்ய திருப்பங்கள், டுவிஸ்ட்கள் போன்றவை ரசிகர்களை பார்க்க தூண்டுகிறது.
காதல் குகையில் நடந்த டுவிஸ்ட்
கடந்த வாரம் ஹர்ஷ் ருஷாலியை விட்டு விட்டு தனியாக காதல் குகைக்கு சென்றார். அங்கே அவருடைய முன்னாள் காதலியான சுபி உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார்.
வெளியே தனியாக காதலரை பிரிந்து நின்று கொண்டிருந்த ருஷாலி, சன்னி லியோனிடம் காதல் குகையில் வேறு ஏதாவது பெண்ணுடன் தனது காதலர் கனெக்ஷன் கொடுத்து விடுவாரோ என நினைத்து வருத்தப்பட்ட நிலையில், புதிய காதலி தான் முக்கியம் என்றும், முன்னாள் காதலியின் காதலை ஏற்க முடியாது எனக் கூறிய ஹர்ஷ், மேடைக்கு தனது முன்னாள் காதலியுடன் கை கோர்த்து வந்து ருஷாலியை மேலும் டுவிஸ்ட் கொடுத்து அதிர்ச்சியடைய வைத்தார். அதன் பின்னர் ஹர்ஷ் ருஷாலியைத் தான் விரும்புகிறார் என்பதை அறிந்து ருஷாலி மன நிம்மதி அடைந்தார்.
சுபி மற்றும் ருஷாலி இருவரும் மீண்டும் தங்கள் நட்பையும் புதுப்பித்துக் கொண்டனர். ருஷாலி கேம் ஆட வந்தாரா? அல்லது லவ் பண்ண வந்தாரா என ஹர்ஷ் கேட்க, முதலில் கேம் ஆடத்தான் வந்தேன். ஆனால், தற்போது உங்களுடைய காதல் தான் வேண்டும் எனக் கூற ஹர்ஷும் ஹேப்பியாகி விட்டார்.
சிறப்பு விருந்தினராக ஊர்வசி ரவுத்தேலா
இதற்கிடையே இந்த வார லேட்டஸ்ட் எபிசோடில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா திடீரென ஸ்ப்ளிட்ஸ்வில்லா X5 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து போட்டியாளர்களுக்கு சில புதிய போட்டிகளை அரங்கேற்றி நிகழ்ச்சியை வேறலெவல் எண்டர்டெயின்மெண்ட்டுக்கு கொண்டு சென்றார்.
போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றிப் பெற்றது யார் என்பதை அறிவிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர்களான கிங் ஆஃப் ஹார்ட்ஸ் தனுஜ் விர்வானி மற்றும் குயின் ஆஃப் ஹார்ட்ஸ் சன்னி லியோன் மாலை நேரத்தில் வந்து போட்டியாளர்களை சந்தித்தனர்.
நீச்சல் குள போட்டி
கடைசியாக நீச்சல் குள போட்டி ஒன்றை வைத்து வெற்றியாளரை முடிவு செய்ய நினைத்த நிலையில், ஹர்ஷ் மற்றும் ருஷாலி ஜோடிக்கு அவரது நண்பர்கள் ஓட்டுப் போடாத நிலையில், அவர்கள் வெற்றிப் பெறவில்லை. இதனால், ஸ்ப்ளிட்ஸ்வில்லாவில் புதிய சர்ச்சைகளும் குழப்பங்களும் வெடிக்க தொடங்கி உள்ளன.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எம் டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் மாலை 7 மணிக்கு கண்டு ரசிக்கலாம். ஒவ்வொரு வாரமும் ரசிகர்களை கவரும் விதமாக ஏகப்பட்ட கண்களுக்கு குளிர்ச்சியான போட்டிகளும் அரங்கேறி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
