'என் சோலிய முடிக்கணும்ன்னு குறிக்கோளா இருக்காங்க..' கலெக்டர் ஆபிஸில் குமுறிய ஜி.பி.முத்து
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'என் சோலிய முடிக்கணும்ன்னு குறிக்கோளா இருக்காங்க..' கலெக்டர் ஆபிஸில் குமுறிய ஜி.பி.முத்து

'என் சோலிய முடிக்கணும்ன்னு குறிக்கோளா இருக்காங்க..' கலெக்டர் ஆபிஸில் குமுறிய ஜி.பி.முத்து

Malavica Natarajan HT Tamil
Published May 12, 2025 07:38 PM IST

சோசியல் மீடியா பிரபலமும், நடிகருமான ஜி.பி. முத்து, தன் வீட்டுக்கு வரும் பாதையை அடைத்ததுடன், தன்னை முடித்துக்கட்ட சிலர் நினைப்பதாகக் கூறி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். பின், இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடமும் பேசியுள்ளார்.

'என் சோலிய முடிக்கணும்ன்னு குறிக்கோளா இருக்காங்க..' கலெக்டர் ஆபிஸில் குமுறிய ஜி.பி.முத்து
'என் சோலிய முடிக்கணும்ன்னு குறிக்கோளா இருக்காங்க..' கலெக்டர் ஆபிஸில் குமுறிய ஜி.பி.முத்து

கலெக்டர் ஆபிஸ்ல புகார்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில இருந்து வந்திருக்கேன். நான் சொந்தமா வீடு வச்சிருக்கேன். என் வீட்டுக்கு வர்ற பாதை பஞ்சாயத்து பாதை. அதை அடைக்குறதுக்குன்னு ஒரு கும்பல் இருக்கு. பஞ்சாயத்து பாதைங்குறதுக்கான டாகுமெண்ட் எல்லாமே இருக்கு. அப்படி இருக்கும் போது எல்லாரும் என்ன டார்கெட் பண்ணி என் வீட்டு பாதைய அடைக்குறாங்க. அதுக்காக தான் கலெக்டர் ஆபிஸ்ல புகார் கொடுக்க வந்திருக்கேன்.

வடிவேலு மாதிரி ஓடுறேன்

என்கிட்ட பாதைக்கான டாகுமெண்ட் எல்லாத்துலயுமே கீழத்தெருன்னு தான் இருக்கு. இப்போ, கீழத்தெருவ எங்கன்னு கேட்டா, நான் தேட வேண்டியதா தான் இருக்கு. வடிவேலு கிணத்த காணோம்ன்னு தேடிட்டு ஓடுன மாதிரி நான் கீழத்தெருவ காணோம்ன்னு ஓடிட்டு இருக்கேன். என் தெருவையே காணோம்.

என் தாய் பத்திரம் தொடங்கி எல்லாத்துலயும் கீழத்தெருன்னு தான் இருக்கு. இப்போ, நான் கீழத்தெரு பத்தி பஞ்சாயத்துல பாக்க போனா பாத்து சொல்றேன்னு சொல்றாங்க. தாலுகா ஆபிஸ்ல கேட்டாலும் இதே தான் சொல்றாங்க. எல்லாருமே நடவடிக்கை எடுக்குறாங்க. என் பாதைய அடைச்சுட்டாங்கன்னு சொல்லி எல்லா இடத்துலயுமே நடவடிக்கை எடுக்குறாங்க.

நைட்டு எல்லாம் பிரச்சனை

ஆனா என் தெருவ அடைச்சுட்டு, செவரு கட்டிட்டு, எல்லாரும் ஒன்னு சேந்து என்ன ரொம்ப டார்கெட் பண்றாங்க. இத நான் சட்டப்படி ஐகோர்ட்ல நடவடிக்கை எடுத்தா பிரச்சனை பண்ணுவோம்ன்னு சொல்லி, என்கிட்ட தினமும் பிரச்சனை தான். நேத்து நைட்டு 11 மணி வரைக்கும் பிரச்சனை தான். இன்னைக்கு காலையில போலீஸ் ஸ்டேஷன் போய் பெட்டிசன் கொடுத்துட்டு வந்திருக்கேன்.

என் சமுதாயத்த சேந்தவங்க தான்

இப்படியே என்ன ரொம்ப டார்ச்செர் பண்ணிட்டே இருக்காங்க. முதல்ல என்னோட கீழத்தெருவ அதிகாரிகள் எல்லாரும் சேர்ந்து கண்டுபிடிச்சு தரணும். அதுக்காக தான் மனு கொடுக்க வந்திருக்கேன். எல்லாருமே எங்க சமுதாயத்த சேர்ந்தவங்க தான். அவங்க பாஜக அப்புறம் இன்னும் சில கட்சியில இருக்காங்க. நான் கட்சிய எல்லாம் பாக்கல. எனக்கு என் பாதை வேணும். நான் கட்சி அடிப்படையில பேசவே இல்ல.

என்ன திட்ட காசு கொடுக்குறாங்க

இது நான் வீடு வாங்குனதுல இருந்தே பிரச்சனையா தான் இருக்கு. ஒரு 6 வருஷமா நான் இதுக்காக போராடிட்டு தான் இருக்கேன். என் பாதைய அடைக்குறது, என்ன திட்டி பேசுறது, என் வீட்டுக்காரம்மா படுற பாடு எனக்கு தான் தெரியும். ஞாயித்து கிழமை ஆன சிலபேருக்கு தண்ணியடிக்க காசு கொடுத்து என்ன திட்ட வைக்குறாங்க. அதுக்கு எல்லாமே ரெக்கார்டு வச்சிருக்கேன். நான் வீட்லயும் கேமரா வச்சிருக்கேன். அதுலயும் எல்லாம் இருக்கு. 20 அடி பொதுப்பாதை இருக்கு. இப்போ அந்த பாதையும் இல்ல. கீழத்தெருவும் இல்ல.

சட்டப்படி நடவடிக்கை

நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் வீட்ட வாங்குனேன். என் வளர்ச்சி பிடிக்காம இப்படி பண்றாங்க. என் சோலிய முடிக்குனுங்குற குறிக்கோள்ல தான் இத்தனையும் பண்றாங்க. நீங்க என்னமோ பண்ணுங்க. நான் உழைக்குறேன். நான் சம்பாதிக்குறேன். நான் வீடு வாங்குறேன். நான் சொத்து சேத்து வச்சிருக்கேன். எனக்கு ரொம்ப தொந்தரவா இருக்கு. இதுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கனும். என பத்திரிகையாளர்களிடம் கூறினார்.