Goundamani: "இண்டு இடுக்கு சந்து பொந்துல இருக்க ரசிகர்களுக்கு.." ஒத்த ஓட்டு முத்தையா படம் பற்றி கவுண்டமணி கல கல பேச்சு
Goundamani Latest Speech: திரும்ப திரும்ப சொல்றேன் ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள். ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுவது உங்கள் கடமை. இன்னும் யாராவது இண்டு இடுக்கு சந்து பொந்து இருந்தால் அவர்களுக்கும் நன்றி என தனது ஸ்டைலில் நக்கல் பேச்சை மேடையில் பேசினார் கவுண்டமணி

தமிழ் சினிமாவில் காமெடி கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக கவுண்டமணி இருந்து வருகிறார். தனது காமெடியால் ரசிகர்களை தலைமுறைகளை கடந்து சிரிக்க வைப்பவராக இருந்து வரும் கவுண்டமணி, இன்றைய டிஜிட்டல் தலைமுறையினரின் மீம் நாயகனாகவும், ரீல்ஸ் மன்னனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையடுத்து கவுண்டமணி கதையின் நாயகனாக ஒத்து ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவுண்டமணி தனது நக்கல் பேச்சு சிறிது அளவும் குறையாமல் நகைச்சுவையாக பேசி கலகலப்பூட்டினார். படம் குறித்து பேசும்போது படத்தில் பணியாற்றிய நடிகர்கள், டெக்னீஷ்யன்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது படத்தின் காமெடி வசனம் போல் இன்னும் இண்டு இடுக்கில் உள்ள சந்து பொந்தில் உள்ள ரசிகர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
விழாவில் கவுண்டமணி பேசியதாவது, "என்ன பேசறதுன்னு தெரியல. எல்லாரும் பேசிட்டாங்க. நான் என்னத்த பேசுறது. எல்லாரும் ஒத்த ஓட்டு முத்தையா பத்தி தான் பேசி இருக்காங்க
இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவி ராஜா சிறந்த முறையில் தயாரித்துள்ளார். ஒத்த ஓட்டு முத்தையா குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பாருங்கள். இணைத்தயாரிப்பாளர் கோவை ராஜன் உழைத்திருக்கிறார். அவருக்கும் நன்றி.
வேறு யாராவது இருக்காங்களா
இயக்குநர் பி. வாசு அவரது 24 படங்களில் நடித்திருப்பதாக சொன்னார். அத்தனையும் வெற்றி படங்கள். அவருக்கு எனது நன்றி. பாக்யராஜ் எனது ரூம்மேட். அவரை பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. பெரிய டைரக்டர்.அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தயாரிப்பாளர் கே. ராஜன், எனது நண்பர் தான், அவருக்கு என்னுடைய நன்றி. அடுத்தபடியாக இசையமைப்பாளர் சித்தார் விபன். நீங்களே பாடலை பார்த்தீர்கள். அவருக்கும் எனது நன்றி.
இயக்குநர் சாய் ராஜ்கோபால் சிறந்த காமெடி ரைட்டர். ஆரம்பம் வரை இறுதி வரை சிரித்துக்கொண்டே இருக்கலாம். தவறாமல் படம் பாருங்கள். பிறகு வேற யாராவது இருக்காங்களா?
என்னோடு நடித்த நடிகர், நடிகைகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் அனைவரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த விழாவுக்கு வந்திருக்கும் ரசிகர்கள், வராத ரசிகர்கள், வீட்டிலேயே இருக்கும் ரசிகர்கள், வெளியூர், வெளிநாட்டில், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விழாவை சிறப்பாக நடத்தி கொடுத்த பிஆர்ஓ நிகில் முருகனும் நன்றிகள்.
திரும்ப திரும்ப சொல்றேன்
இந்த ஒத்து ஓட்டு முத்தையா படத்தை பாருங்கள். நன்றாக பாருங்கள், திரும்ப பாருங்கள். திரும்பவும் சொல்றேன், ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள். திரும்ப திரும்ப சொல்றேன் ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள்.
திரும்பி பார்த்துவிட்டும் சொல்கிறேன் ஒத்து ஓட்டு முத்தையாவை பாருங்கள். மறந்து விடாதீர்கள். ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுவது உங்கள் கடமை. உங்கள் பொறுப்பும். நன்றி வணக்கம், வெல்கம், தாங்கயூ" என்று பேசினார். விசில் சத்தம், கரகோஷங்களும் பறந்த நிலையில் வேற எதாவது சொல்லனுமா என்ற கேட்டார்.
இண்டு இடுக்கு சந்து பொந்தில் இருப்பவர்களுக்கு நன்றி
அப்போது பிஆர்ஓ நிகில் காதில் சொன்னதை கேட்டு மறுபடியும் பேச தொடங்கிய கவுண்டமணி, "பக்கத்துலயே இருக்காரு மறந்துடேன். கேமராமேன் காத்தவராயன் சிறந்த முறையில் எல்லாருக்கும் வெளிச்சமா தெரியுற மாதிரி படம் எடுத்திருக்காரு. அவருக்கும் எனது நன்றியை. அப்புறம் ஆர்ட் டைரக்டர் மகேஷுக்கு நன்றி.
அப்புறம் எடிட்டர் ராஜா சேதுபதி நல்லா எடிட் பன்னதுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு, இன்னும் யாராவது இண்டு இடுக்கு சந்து பொந்து ரசிகர்கள் எங்காவது இருந்தால் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டு மீண்டும் ரயிலில், பஸ்ஸில் போகும், பிளைட்டில், ஹெலிகாப்டரில் போகும் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என கலகலப்பூட்டினார்.
ஓத்த ஓட்டு முத்தையா படம்
ஆறு ஆண்டு இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்திருக்கும் படமாக ஒத்த ஓட்டு முத்தையா உருவாகியுள்ளது. சுந்தரி நீயும் சுந்தரன் நானும், கிச்சா வயசு 16 படங்களை இயக்கிய சாய் ராஜகோபால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அரசியல் கலந்த காமெடி பாணியில் உருவாகியிருக்கும் படத்தில் அரசியல்வாதியாக கவுண்டமணி நடித்துள்ளாராம்.
தனது மூன்று தங்கைகளை, மூன்று சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைப்பதையே லட்சியமாக கொண்டிருக்கும் அவர், அவர்களுக்கு அண்ணன் தம்பிகளான மூவருக்கு திருமணம் செய்து வைப்பதே படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.
படத்தில் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர்கள் நாகேஷ் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி மற்றும் காமெடி நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் ஆகியோர் நடிக்த்துள்ளார்கள். கவுண்டமணியின் தங்கைகளாக சாய்தன்யா, ஜிவி அப்ர்ணா, பிந்து ஆகியோர் நடித்துள்ளார்கள். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்