Good Bad Ugly: கிளுகிளுப்புக்கு கிடாவெட்டு.. மண்டையை கழுவிய அஜித்! - ஆதிக் இப்படி மாறிப்போனது ஏன்?
Good Bad Ugly: அவர் சொன்ன வார்த்தை என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாம் முன்மாதிரியாக நினைத்த ஒருவர் நமக்கு இப்படி உத்வேகம் கொடுத்து முன்னோக்கி தள்ளுவது ஆச்சரியமாக இருந்தது. - ஆதிக்

இன்றைய தேதிக்கு டாக் ஆஃப் தி டவுண் என்றால், அது ஆதிக் ரவிச்சந்திரன்தான். ‘குட் பேட் அக்லி’ படத்தில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்ற அஜித்தை டீசரில் நன்றாகவே குக் செய்து கொடுத்திருக்கிறார். நேற்று வெளியான படத்தின் முதல் பாடலான ஓஜி சம்பவமும் சம்பவம் செய்திருக்கிறது.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா
‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் மூலமாக சினிமா என்ட்ரி கொடுத்த போது ஆதிக்கிற்கு வயது 22. ‘வெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாதுடி’ என்று ட்ரெய்லரிலேயே அலறவிட்ட அவர், படத்தில் வைத்த கிளுகிளுப்பான காட்சிகள், இந்த டைரக்டர் கொஞ்சம் வேற மாறி போலியே என்று எடை போட வைத்தது. அடுத்தப்படத்தில் சிம்புவுடன் கைகோர்த்த அவருக்கு படத்தில் தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரும் சங்கடத்தை உண்டாக்கி விட்டது. பலன், படம் அட்டர் ஃப்ளாப்பாக மாறியது. நொந்து போனார் ஆத்விக்..
