Good Bad Ugly Update: குட் பேட் அக்லி பாடல்களில் இளையராஜாவுக்கு ராயல்டியா? - காப்புரிமை சட்டம் சொல்வதென்ன? - விளக்கம்!
Good Bad Ugly Update: குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோருவது ஏன்? - காப்புரிமை சட்டம் சொல்வதென்ன?

Good Bad Ugly Movie: குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி உள்ளிட்ட தான் இசையமைத்த பாடல்களை தன்னுடய அனுமதியில்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் சரவணன் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா நோட்டீஸ்
அந்த நோட்டீஸில் தான் இசையமைத்த ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி உள்ளிட்ட பாடல்கள் இளையராஜா அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு இழப்பீடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அத்துடன் 7 நாட்களில் பாடல்களை படத்திலிருந்து நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் புதிய தலைமுறை சேனலுக்கு பேசி இருக்கிறார். அவர் பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.
என்ன சொல்கிறார் வழக்கறிஞர்
அதில் அவர் பேசும் போது, ‘குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் அவரது அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கான ராயல்டி தொகையையும் அவருக்கு வழங்கப்படவில்லை. இந்த இரு விதிமீறல்களின் அடிப்படையில் இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில், படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இளையராஜாவிற்கு இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நமது ஊரில் காப்புரிமை தொடர்பான புரிதல் யாருக்குமே இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறன. இதற்கு முன்னால் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திலும் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டு இருந்ததிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதிலும், அதேபோன்ற பிரச்சனையைதான் செய்து வைத்திருக்கிறார்கள். பாடல்களை பயன்படுத்துவது மட்டுமல்ல. நம்முடைய காப்புரிமை சட்டம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் எடுத்துரைக்கிறது. அது என்னவென்றால், ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த பாடலை மற்றொரு இடத்தில் பயன்படுத்தும் போது, அதனை கேலி செய்யும் வகையிலோ அல்லது சிதைக்கும் வகையிலோ உபயோகிக்கக்கூடாது. ஆனால், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் சிதைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த விவகாரத்தில் இளையராஜா கேள்வி எழுப்புவதற்கு முழு உரிமை இருக்கிறது.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்