Good bad ugly update: குட் பேட் அக்லி எமோஷனல் படமா?.. ‘கடுமையான டயட்..ட்ராவலில் தூக்கம்; அஜித் பட்ட பாடு’ -ஆதிக் பேட்டி!
Good bad ugly update: குட் பேட் அக்லி டைட்டிலை அஜித்தான் கொடுத்தார். அஜித் இந்த தலைப்பை சொன்னது மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியானது.

Good bad ugly update: குட் பேட் அக்லி எமோஷனல் படமா?.. ‘கடுமையான டயட்..ட்ராவலில் தூக்கம்; அஜித் பட்ட பாடு’ -ஆதிக் பேட்டி!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தைத் தயாரித்து இருக்கிறது. இப்படம் வரக்கூடிய, இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்திலிருந்து வெளியான ஓஜி சம்பவம் பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பாகவும், அஜித்துடன் பணியாற்றியது குறித்தும் விகடன் இணையதளத்திற்கு படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி கொடுத்திருக்கிறார்.