குட் பேட் அக்லி: ஃபேன் பாய் சம்பவம்.. அலற விடும் ஆதிக் ‘நான் வர்றேன் மாமே’; குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  குட் பேட் அக்லி: ஃபேன் பாய் சம்பவம்.. அலற விடும் ஆதிக் ‘நான் வர்றேன் மாமே’; குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இங்கே!

குட் பேட் அக்லி: ஃபேன் பாய் சம்பவம்.. அலற விடும் ஆதிக் ‘நான் வர்றேன் மாமே’; குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 25, 2025 08:58 PM IST

குட் பேட் அக்லி: அஜித் குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

குட் பேட் அக்லி: ஃபேன் பாய் சம்பவம்.. அலற விடும் ஆதிக் ‘நான் வர்றேன் மாமே’; குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இங்கே!
குட் பேட் அக்லி: ஃபேன் பாய் சம்பவம்.. அலற விடும் ஆதிக் ‘நான் வர்றேன் மாமே’; குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இங்கே!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தைத் தயாரித்து இருக்கிறது. மேலும், இப்படம் வரக்கூடிய, இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜித்துடன் மீண்டும் ஜோடியாகும் நடிகை திரிஷாவின் பெயர் 'ரம்யா’ என படக்குழு அறிவித்திருந்தது. முன்னதாக படக்குழுவினர் சார்பில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கடந்த 2024ஆம் ஆண்டு, மே 19ல் வெளியிடப்பட்டது. இதில் அஜித்தின் வெவ்வேறு பாணியிலான மூன்று படங்கள் இடம்பெற்று இருந்தன.

அதிகம் பேரால்பார்க்கப்பட்ட குட் பேட் அக்லி அஜித் லுக்:

இதில் நடிகர் அஜித் குமார் கலர் ஃபுல்லான சட்டை அணிந்து, ஸ்டைலான கூலர் போட்டு, கையில் டாட்டூக்களுடன் மாஸாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சோசியல் மீடியாவில் அதிமான நபரால் பார்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோரின் அதிகாரப் பூர்வ எக்ஸ் தளக் கணக்கில் மட்டும் விரைவில், 41 மில்லியன் பார்வையாளர்கள், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரினை பார்த்து ரசித்துள்ளனர்.

விலைமதிப்பற்ற தருணங்கள்

குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் பணியாற்றியது தொடர்பாக பேசும் போது "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் விலைமதிப்பற்ற தருணங்கள் உள்ளன. இது எனது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. 

அஜித் குமார் சாருடன் பணிபுரிவது எனக்கு ஒரு நீண்ட கனவாக இருந்தது. அவருடன் பணிபுரிவதில் நான் எமோஷனலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார் மற்றும் ரவிசங்கர் சார் ஆகியோருக்கு நன்றி’’ எனத் தெரிவித்து இருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.