Good Bad Ugly Review: ‘10 நிமிடத்துக்கு ஒரு பாய்ச்சல்..’ AK யுனிவர்சல் வேலை செய்ததா.. குட் பேட் அக்லி திரைவிமர்சனம்!
Good Bad Ugly Review: விடாமுயற்சியில் விட்டதையும், இன்னும் பிற படங்களில் தொட்டதையும் எடுத்து தட்டித் தூக்கியிருக்கிறார் ஏகே!

Good Bad Ugly Review: அஜித் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கதைக்களம் என்ன?
குடும்பத்திற்காக தன்னுடைய கேங்கஸ்டர் தொழிலை விட முடிவு செய்யும் ஏகே, செய்த தவறுகளுக்காக ஜெயிலுக்கு சென்று தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார். அதே நேரம் இது தன்னுடைய மகன் விஹானுக்கு தெரியாமலும் பார்த்து கொள்கிறார். மனைவி ரம்யாவும், தாத்தாவும் அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறார்கள். விஹான் கேட்கும் போதெல்லாம் அப்பா பெரிய பிசினஸ் மேன்.. அதனால் நினைத்த போதெல்லாம் அவரால் வரமுடியாது என்று சொல்லி சமாளிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் மகனுக்காக ஏகே வெளியே வருகிறார். அந்த சமயத்தில் ஸ்பெயினில் இருக்கும் ஒரு கும்பல் விஹானை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்கிறது. விஹானை அதில் சிக்க வைத்தது யார்? அதற்கான காரணம் என்ன? ஒரு தந்தையாக விஹானை அந்த கும்பலிடம் இருந்து மீட்க ஏகே எடுத்த ரிவெஞ்ச் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் குட் பேட் அக்லி படத்தின் கதை!
ரசிகர்களுக்கு தீனி போடும் அஜித்
நீண்ட நாட்களாக அஜித்தை ரசிகர்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ அதனை அப்படியே திரையில் காண்பித்து இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். கோட் சூட், நெகட்டிவ் லுக், மாஸ் டயலாக்ஸ், ஸ்லோ மோஷன் வாக் என மொத்தமாக அஜித்தின் ராஜாங்கம் திரையை அலற விட்டு இருக்கிறது. அப்பாவுக்கான எமோஷனிலும் அஜித் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
மனைவியாக வரும் த்ரிஷாவின் முகத்தில் தென்பட்ட முதுமை… அம்மணிக்கு வயதாகி விட்டது என்பதை உறுதி செய்தது. இருப்பினும், கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார்.
அஜித் உடனே இருக்கும் சுனிலுக்கும், பிரசன்னாவிற்கும் பெரிதாக வேலை இல்லை. தாத்தாவாக வரும் பிரபு மாஸ் டயலாக் பேசும் செட் ப்ராபர்ட்டியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். ஏகே மகனாக வந்திருக்கும் கார்த்திகேயகா நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
டபுள் வில்லனாக நடித்திருக்கும் அர்ஜூனிடம் இன்னும் சிறப்பான நடிப்பை எதிர்பார்த்தோம்.. பிரியா பிரகாஷ் வாரியருக்கு ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ ஒன்று போதும்..
ஒரு ரசிகனின் படைப்பு
அஜித்தை ஒரு ரசிகனாக தான் பார்த்து என்ஜாய் செய்த அனைத்து மொமண்டுகளையும் படத்தில் வைத்து திரையை தீப்பிடிக்க வைத்து இருக்கிறார் ஆதிக். அதில் பெரும்பான்மையானவை நன்றாகவே வொர்க் அவுட் ஆகி இருக்கின்றன.
மகனை காப்பாற்ற கேங்ஸ்டர் ஏ கே என்ன செய்தார்? என்ற ஒற்றை லைனை கருவாக வைத்து கதை நகர்த்தி இருக்கும் ஆதிக்கின் எக்ஸ்ட்ரீம் ஃபேலவர் சில இடங்களில் கொஞ்சம் ஓவர் டோஸ்தான்.
குறிப்பாக சண்டை காட்சிகளில் பாடல் வைத்து கூஸ்பம்ப்ஸ் ஏற்றுகிறேன் என்று சொல்லி இழு இழு வென இழுத்தது.. ஏகே மாஸாக காட்டுகிறேன் என்ற பெயரில் அதிக இடங்களில் ஸ்லோ மோஷன் காட்சிகளை பயன்படுத்தியது உள்ளிட்டவை, எப்ப சார் கதை சொல்லுவீங்க என்று கேட்க வைத்து விட்டது.
கதையிலும் பெரிதாக ஆழம் இல்லை.. ஃபேன் பாய், அஜித் ஆரா, முந்தைய படங்களின் ரெஃப்ரன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் மனதிற்குள் இருந்தாலும் ஆதிக் கதையில் கோட்டை விட்டது படத்தின் பெரிய ஓட்டை.. அதனால், ஆதிக் என்னதான் எமோஷனை கடத்த முட்டி மோத முயன்றாலும் அது ரசிகர்களைத்தாண்டி சாதரண ரசிகர்களிடம் சென்று சேரவில்லை.
புலி புலி, தல களத்துல பாடல்கள் நன்றாக இருந்தாலும், பின்னணி இசையில் ஜிவியின் தனித்துவமான முத்திரை மிஸ்ஸிங்.. அபிநந்தன் ஒளிப்பதிவு முடிந்தவரை காட்சிகளை மாஸாக்க முயற்சித்திருக்கிறது. மாஸான கார் சேசிங் காட்சிகளில் விவேக் கொஞ்சம் பார்த்து கத்தரித்து இருக்கலாம். மொத்தமாக சொல்லவேண்டுமென்றால், அஜித் ஆரா மாஸ் காட்டினாலும், எமோஷன் பெரிதளாவு வொர்க் அவுட் ஆகாத காரணத்தால் குட் பேட் அக்லி கொட்டு வாங்கி நிற்கிறது.

டாபிக்ஸ்