Good Bad Ugly Movie Update: குட் பேட் அக்லியில் கேமியோ ரோல்? அடிபடும் முக்கிய நடிகரின் பெயர்! யார் என்று தெரியுமா?
Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் அவரிந் தீவிர ரசிகர் நடிகரான ஒருவர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.

Good Bad Ugly Movie Update: குட் பேட் அக்லியில் கேமியோ ரோல்? அடிபடும் முக்கிய நடிகரின் பெயர்! யார் என்று தெரியுமா?
Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படததின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து ரசிகர்களை குஷியாக்கி வரும் நிலையில், தற்போது மற்றொரு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
கேமியோ ரோலில் முக்கிய நடிகர்
அந்த அறிவிப்பின் படி, அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில், அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.