Good Bad Ugly Movie Box Office: 2ம் நாளே சரிவை சந்தித்த அஜித்.. பாதிக்கு பாதி கூட கலெக்ஷன் இல்லை.. வெளியானது அறிக்கை
Good Bad Ugly Movie Box Office: அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான 2 ஆம் நாளே மாபெரும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Good Bad Ugly Movie Box Office: நடிகர் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம், ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்த நிலையில், இப்படம் நேற்று முன்தினம் அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 50 கோடி ரூபாய் வசுலை ஈட்டியுள்ளது. ஆனால், இந்த வசூல் 2 ஆம் நாளே வசூல் பெரிய சரிவை சந்தித்துள்ளது.
'குட் பேட் அக்லி' பாக்ஸ் ஆபிஸ்
திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிடும் Sacnilk.com இன் பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, 'குட் பேட் அக்லி' படத்தின் வசூல் இரண்டாம் நாளில் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று தமிழ்நாட்டில் மட்டும் குட் பேட் அக்லி படம் ரூ. 13.03 கோடி வசூலித்ததாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முதல் மற்றும் இரண்டாம் நாளின் வசூலைச் சேர்த்தால், மொத்த வசூல் 41.18 கோடி ரூபாயாக உள்ளது.
வெள்ளிக்கிழமை தமிழில் 42.89% டிக்கெட்டுகளே புக் செய்யப்பட்டதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. காலை காட்சிகளில் 28.80%, மதிய காட்சிகளில் 46.87%, மற்றும் மாலை காட்சிகளில் 52.99% புக்கிங் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.
கதைக்களம் என்ன?
குடும்பத்திற்காக தன்னுடைய கேங்கஸ்டர் தொழிலை விட முடிவு செய்யும் ஏகே, செய்த தவறுகளுக்காக ஜெயிலுக்கு சென்று தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார். அதே நேரம் இது தன்னுடைய மகன் விஹானுக்கு தெரியாமலும் பார்த்து கொள்கிறார். மனைவி ரம்யாவும், தாத்தாவும் அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறார்கள். விஹான் கேட்கும் போதெல்லாம் அப்பா பெரிய பிசினஸ் மேன்.. அதனால் நினைத்த போதெல்லாம் அவரால் வரமுடியாது என்று சொல்லி சமாளிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் மகனுக்காக ஏகே வெளியே வருகிறார். அந்த சமயத்தில் ஸ்பெயினில் இருக்கும் ஒரு கும்பல் விஹானை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்கிறது. விஹானை அதில் சிக்க வைத்தது யார்? அதற்கான காரணம் என்ன? ஒரு தந்தையாக விஹானை அந்த கும்பலிடம் இருந்து மீட்க ஏகே எடுத்த ரிவெஞ்ச் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் குட் பேட் அக்லி படத்தின் கதை!
தீனி போட்ட அஜித்
நீண்ட நாட்களாக அஜித்தை ரசிகர்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ அதனை அப்படியே திரையில் காண்பித்து இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். கோட் சூட், நெகட்டிவ் லுக், மாஸ் டயலாக்ஸ், ஸ்லோ மோஷன் வாக் என மொத்தமாக அஜித்தின் ராஜாங்கம் திரையை அலற விட்டு இருக்கிறது. அப்பாவுக்கான எமோஷனிலும் அஜித் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
‘குட் பேட் அக்லி’
'குட் பேட் அக்லி' ஒரு ஆக்ஷன் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது . இதில் அஜித் 'ரெட் டிராகன்' என்ற பயங்கரவாதியாக நடிக்கிறார். பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
