குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 250 கோடிக்கு குறிவைக்கும் குட் பேட் அக்லி! 11 ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 250 கோடிக்கு குறிவைக்கும் குட் பேட் அக்லி! 11 ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன?

குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 250 கோடிக்கு குறிவைக்கும் குட் பேட் அக்லி! 11 ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன?

Malavica Natarajan HT Tamil
Published Apr 21, 2025 03:15 PM IST

குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியான 11 நாட்களில் பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்களை இங்கு காணலாம்.

குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 250 கோடிக்கு குறிவைக்கும் குட் பேட் அக்லி! 11 ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன?
குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 250 கோடிக்கு குறிவைக்கும் குட் பேட் அக்லி! 11 ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன?

குட் பேட் அக்லி வசூல்!

'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குள்ளாகவே உலகம் முழுவதும் சுமார் 200 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வலைதளத்தின் தகவல் படி குட் பேட் அக்லி படம் 11 ஆம் நாளில் பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 11ஆம் நாளான நேற்று 7.4 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக 132.55 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்தப் படம் இந்திய அளவில் 154.05 கோடி ரூபாய் வசூலையும் உலகம் முழுவதும் 212.5 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

250 கோடி இலக்கு

படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்த பின்னும் தியேட்டர்களில் வசூல் அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறது. குறிப்பாக வார நாட்களில் குட் பேட் அக்லி படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. அத்துடன் கோடை விடுமுறை நாட்கள் நெருங்கியுள்ளதால் படத்தின் வசூல் மேலும் அதிகரித்து விரைவிலேயே 250 கோடி ரூபாயை ஈட்டும் எனத் தெரிகிறது.

200 கோடி ரூபாய் பட்ஜெட்?

மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் எனக் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும இல்லை.

குட் பேட் அக்லி கதை

'குட் பேட் அக்லி' படத்தில், ரெட் டிராகன் என்ற கும்பல் தலைவனாக அஜித் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப், கார்த்திகேயன் தேவ், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.