குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 100 கோடி வசூலுக்கு பின் தமிழ்நாட்டில் சர்ரென சரிந்த குட் பேட் அக்லி வசூல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 100 கோடி வசூலுக்கு பின் தமிழ்நாட்டில் சர்ரென சரிந்த குட் பேட் அக்லி வசூல்..

குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 100 கோடி வசூலுக்கு பின் தமிழ்நாட்டில் சர்ரென சரிந்த குட் பேட் அக்லி வசூல்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 16, 2025 07:53 AM IST

குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: விடுமுறை தினங்கள் முடிவடைந்ததன் எதிரொலியாக குட் பேட் அக்லி படத்தின் 6 ஆம் நாள் வசூல் வெகுவாக குறைந்துள்ளது.

குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 100 கோடி வசூலுக்கு பின் தமிழ்நாட்டில் சர்ரென சரிந்த குட் பேட் அக்லி வசூல்..
குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 100 கோடி வசூலுக்கு பின் தமிழ்நாட்டில் சர்ரென சரிந்த குட் பேட் அக்லி வசூல்..

150 கோடி ரூபாய் வசூல்!

வெளியாகி சில நாட்களில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுவதும் 170 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வலைதளத்தின் தகவல் படி குட் பேட் அக்லி படத்தின் 6 ஆம் நாள் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.

6 ஆம் நாளில், தமிழ்நாட்டில் மட்டும் 6.25 கோடி ரூபாய் வசூலைப் பெற்று மொத்தமாக 102.85 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 5 ஆம் நாளில் 14.5 கோடி வசூல் செய்த இந்தப் படம் நேற்று ஒரே நாளில் வசூலில் பாதியாக குறைந்துள்ளது.

இதையடுத்து இந்தப் படம் இந்திய அளவில் 119.35 கோடி ரூபாய் வசூலையும் உலக அளவில் 171.5 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

முதல் நாளில் சுமார் 57 கோடி ரூபாய் வசூல் செய்த 'குட் பேட் அக்லி', இரண்டாம் நாளில் சுமார் 28 கோடி ரூபாய் வசூல் செய்தது. மீண்டும் வார இறுதியில் வசூல் அதிகரித்து, மூன்றாம் நாளில் 36.50 கோடி ரூபாயும், நான்காம் நாளில் 37 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம், முதல் வார இறுதியில் 150 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

அதிக வசூல் செய்த படம்

குட் பேட் அக்லி இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் படமாகும். இது சமீபத்தில் மத கத ராஜா மற்றும் வீர தீர சூரன் ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் உயர்ந்து நிற்கிறது. அஜித்தின் கடைசி படமான விடமுயாற்சியும், முதலிடத்தில் இருக்கும் பிரதீப் ரங்கநாதனின் டிராகனும் அதன் வழியில் நிற்கின்றன. மே மாதம் சூர்யாவின் ரெட்ரோ வெளியாகும் நிலையில், குட் பேட் அக்லி படம் எப்படி வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உண்மையான சோதனை இப்போதுதான்!

இதுவரை சனி, ஞாயிறு விடுமுறை, தமிழ் புத்தாண்டு விடுமுறை நாட்கள் போன்றவை 'குட் பேட் அக்லி' படத்திற்கு கூடுதல் வசூலைக் கொடுத்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை முதல் தான் இந்த படத்தின் உண்மையான சோதனை தொடங்கும். வசூல் தொடர்ந்து நிலையாக இருந்தால், இந்த படத்தின் திரையரங்க வெற்றி உறுதி செய்யப்படும். இந்த சோதனையை 'குட் பேட் அக்லி' தாண்டி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

200 கோடி ரூபாய் பட்ஜெட்?

மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் எனக் கூறப்படுகிறது.

'குட் பேட் அக்லி' படத்தில், ரெட் டிராகன் என்ற கும்பல் தலைவனாக அஜித் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப், கார்த்திகேயன் தேவ், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.