Good Bad Ugly Box Office: 5 நாளும் ஹவுஸ் ஃபுல் தான்.. பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்டு செய்யும் குட் பேட் அக்லி!
Good Bad Ugly Box Office: அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் வெளியாகி 5 நாட்களிலும் குட்பேட் அக்லி திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாகி நிரம்பி வழிந்து பாக்ஸ் ஆபிஸில் புது வரலறு படைத்துள்ளது.

Good Bad Ugly Box Office: அஜித் குமார் நாயகனாக நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம், ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த ஆக்ஷன் திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் அசத்தலான வசூலைக் குவித்து வருவதுடன் முதல் வார இறுதியில் அபார வெற்றியைப் பெற்றது.
150 கோடி ரூபாய் வசூல்!
வெளியாகி நான்கு நாட்களில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வலைதளத்தின் தகவல் படி குட் பேட் அக்லி படத்தின் 5 ஆம் நாள் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.
5 ஆம் நாளில், தமிழ்நாட்டில் மட்டும் 13.86 கோடி ரூபாய் வசூலைப் பெற்று மொத்தமாக 95.96 கோடி ரூபாய் வசூலையும், தெலுங்கில் 70 லட்ச ரூபாயும் பெற்று மொத்தமாக 4.9 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளது. மேலும், இந்திய அளவில் 101. 6 கோடி ரூபாய் வசூலையும் உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளதாகத் தெரிகிறகு,
முதல் நாளில் சுமார் 57 கோடி ரூபாய் வசூல் செய்த 'குட் பேட் அக்லி', இரண்டாம் நாளில் சுமார் 28 கோடி ரூபாய் வசூல் செய்தது. மீண்டும் வார இறுதியில் வசூல் அதிகரித்து, மூன்றாம் நாளில் 36.50 கோடி ரூபாயும், நான்காம் நாளில் 37 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம், முதல் வார இறுதியில் 150 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
அதிக வசூல் செய்த படம்
குட் பேட் அக்லி இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் படமாகும். இது சமீபத்தில் மத கத ராஜா மற்றும் வீர தீர சூரன் ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் உயர்ந்து நிற்கிறது. அஜித்தின் கடைசி படமான விடமுயாற்சியும், முதலிடத்தில் இருக்கும் பிரதீப் ரங்கநாதனின் டிராகனும் அதன் வழியில் நிற்கின்றன. மே மாதம் சூர்யாவின் ரெட்ரோ வெளியாகும் நிலையில், குட் பேட் அக்லி படம் எப்படி வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உண்மையான சோதனை இப்போதுதான்!
இதுவரை சனி, ஞாயிறு விடுமுறை, தமிழ் புத்தாண்டு விடுமுறை நாட்கள் போன்றவை 'குட் பேட் அக்லி' படத்திற்கு கூடுதல் வசூலைக் கொடுத்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை முதல் தான் இந்த படத்தின் உண்மையான சோதனை தொடங்கும். வசூல் தொடர்ந்து நிலையாக இருந்தால், இந்த படத்தின் திரையரங்க வெற்றி உறுதி செய்யப்படும். இந்த சோதனையை 'குட் பேட் அக்லி' தாண்டி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
200 கோடி ரூபாய் பட்ஜெட்?
மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் எனக் கூறப்படுகிறது.
'குட் பேட் அக்லி' படத்தில், ரெட் டிராகன் என்ற கும்பல் தலைவனாக அஜித் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப், கார்த்திகேயன் தேவ், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
