அஜித்தா இது..? அடியோடு மாற்றிய ரசிகர்.. ' இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு ' - ஆதிக் ரவிச்சந்திரன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அஜித்தா இது..? அடியோடு மாற்றிய ரசிகர்.. ' இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு ' - ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித்தா இது..? அடியோடு மாற்றிய ரசிகர்.. ' இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு ' - ஆதிக் ரவிச்சந்திரன்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 15, 2024 06:56 AM IST

இவ்வளவு பெரிய வாய்ப்பை எனக்கு கொடுத்த அஜித் சாருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கனவு நிறைவேறி விட்டது. - ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித்தா இது..? அடியோடு மாற்றிய ரசிகர்.. ' இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு ' - ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித்தா இது..? அடியோடு மாற்றிய ரசிகர்.. ' இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு ' - ஆதிக் ரவிச்சந்திரன்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்து படப்பிடிப்பு மும்மரமாக நடந்தது. படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் படம் தொடர்பான அப்டேட் ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், " இவ்வளவு பெரிய வாய்ப்பை எனக்கு கொடுத்த அஜித் சாருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கனவு நிறைவேறி விட்டது. லவ் யூ சோ மச் சார். அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பில் இருந்து.. என்ன ஒரு அருமையான பயணம்' என்று பதிவிட்டு இருக்கிறார்.

குவிந்த பிரபலங்கள்

குட் பேட் அக்லி படத்தில் அஜித் 3க்கும் மேற்பட்ட வேடங்களில் தோற்றமளிக்கும் நிலையில், அஜித் இந்த படத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கலாம் என பரவலாகப் பேசப்படுகிறது.

அஜித்திற்கு ஜோடியாக இந்தப் படத்தில் த்ரிஷா நடிக்கிறார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா, எஸ்.ஜே.சூர்யா, சுனில், நஸ்லன் போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

டிஎஸ்பி இல்லையா?

மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் மாற்றப்பட்டுள்ளார்

ஏற்கனவே, கங்குவா திரைப்படத்தின் இசை மக்களுக்கு இரைச்சலாக இருப்பதாக கூறிய நிலையில், அந்தப் படத்தின் சத்தத்தை குறைக்குமாறு தயாரிப்பாளர் கூறி இருந்தார். . .

பரவும் வதந்தி

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தருக்கு திருப்திகரமானதாக இல்லாததால், அவரை படத்திலிருந்து நீக்கியதாகவும் சில தகவல்கள் உலா வருகின்றன.

ஜி.வி. பிரகாஷிற்கு முன்னதாக அனிருத்தை இயக்குநர் நாடியதாகவும், ஆனால் அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளதால் இந்த வாய்ப்பை மறுத்து விட்டார் எனவும் கூறப்படுகிறது.

17 வருடம் பின் இணையும் ஜி.வி.பிரகாஷ்

அண்மையில், வசூலில் வெற்றிநடை போட்ட அமரன், லக்கி பாஸ்கர் என 2 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது முழு மூச்சுடன் அஜித் படத்திற்கு இசையமைத்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் கீரிடம் படத்திற்கு பின் 17 ஆண்டுகள் கழித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அஜித் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

ஏற்கனவே, சோசியல் மீடியாவில் கடவுளே அஜித்தே என அவரது ரசிகர்கள் சம்பவம் செய்து வரும் நிலையில், அப்படி தன்னை அழைக்க கூடாது என்று அறிக்கை வெளியிட்டார்.

விடாத விடாமுயற்சி

துணிவு படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படைப்பு முரண்பாடுகள் காரணமாக, அதில் இருந்து அவர் விலகினார்.

இதனையடுத்து, அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இந்தப் படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதன் பின்னர் ஒரு வழியாக படக்குழு படப்பிடிப்பை முடித்து, அண்மையில் டப்பிங் பணிகளை தொடங்கியது. அத்துடன் இந்தப்படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரீலீஸ் தேதி மாற்றப்படும் என்று திரை வட்டாரம் தெரிவிக்கிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.