இணையத்தில் கசிந்த குட் பேட் அக்லி படத்தின் சம்பள விவரம்! த்ரிஷாவுக்கு இவ்ளோ கம்மியா? முழு விவரம் இதோ!
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர்கள் பெற்ற சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்திற்கு கடந்த 2 ஆண்டுகளும் எந்த படமும் வெளியாகமால் இருந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு தொடர்ந்து 2 படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது. ஆனால் இது அஜித் ரசிகர்களுக்கான படம் எனவும் பலர் புகழ்ந்து வருகின்றனர். சிலர் அஜித் ரசிகர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம் என்றால் எதற்காக அனைவரும் பார்க்கும் படி ரீலிஸ் செய்கிறார்கள் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது இப்படத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
படத்தின் பட்ஜெட்
குட் பேட் அக்லி படத்தினை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஓட்டு மொத்தமாக ரூ.280 கோடி பட்ஜெட் செல்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தினை இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. படம் வெளியாகி 3 நாட்களிலேயே படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களின் சம்பளம்
இந்த படத்தில் நடித்த அஜித் குமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடித்த நடிகை த்ரிஷா ரூ.4 கோடி முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாகவும். இசையமைப்பாளர் ஜிவி பிரகாசும் இதே சம்பளம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அர்ஜூன் தாஸ் மற்றும் சுனில் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இந்த படத்திற்காக மொத்தமாக ரூ. 3 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் கணிசமான சம்பளத்தை பெற்றுள்ளனர்.
குட் பேட் அக்லி கதை
ஊரு ஊராக கேங்க்ஸ்டர் ஆக இருக்கும் அஜித் திருந்தி வாழ்கிறார். பின்னர் தன் மகனை கடத்தி சென்றதால் மீண்டும் களம் இறங்கி வில்லன்களை எப்படி பந்தாடுகிறார் என்பது தான் கதை. இதை முழுக்க முழுக்க அஜித் ரசிகராகவே இருந்து ஆதிக் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பொறுப்பு துறப்பு
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்/ பொருள்/ உள்ளடக்கம் என அனைத்தும் வெவ்வேறு ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இவை உண்மையென நாங்கள் ஒரு போதும் கூற வில்லை. இது வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதனை பயன்படுத்திக் கொள்வது பயனாளரின் தனிப்பட்டநோக்கமாகும்.

டாபிக்ஸ்