Gnanvelraja vs Ameer: சந்திக்கு வந்த பருத்திவீரன் பஞ்சாயத்து; ‘பன்னிக்கே 10 விதமா கணக்கு எழுதுனவரு அமீரு’ - ஞானவேல்!
பருத்திவீரன் திரைப்படத்தில் உண்மையில் நடந்த பிரச்சினை குறித்து ஞானவேல் ராஜா பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ அமீர் ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்திற்கு பிறகு ராம் என்ற திரைப்படத்தை அவரது தயாரிப்பிலேயே எடுக்கிறார். அதற்காக நண்பர்கள் சில பேரிடம் கடன் வாங்கினார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஆகிவிட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனால் கடன்காரன் தினமும் அமீரை தேடி வந்து திட்டி விட்டு செல்வான். இதனையடுத்துதான், நான் அந்த பணத்தை கொடுத்து உதவுகிறேன் என்றும் அதற்கு பதிலாக நீங்கள் அடுத்த படம் ஒன்றை செய்து, அதிலிருந்து இந்த பணத்தை செட்டில் செய்யுங்கள் என்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்படி உருவானதுதான் பருத்தி வீரன் திரைப்படம்
பருத்திவீரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி 2 கோடியே 75 லட்சம் ரூபாய். அந்த பணத்தை நான் அவருக்கு கொடுக்க வேண்டும். அந்த பட்ஜெட்டில் படத்தை அவர் எனக்கு எடுத்து முடித்துக்கொடுக்க வேண்டும். இதுதான் ஒப்பந்தம்.
இறுதியாக நான் அமீருக்கு செட்டில் செய்தது 4 கோடியே 80 லட்சம். அவருக்கு நான் வழக்கறிஞர் மூலமாக பத்திரம் ஒன்றை அனுப்பினேன். அந்த மனுவில் இந்த ஒப்பந்தத்தின்படி, நீங்கள் நடக்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்ற வரிகள் இடம் பெற்று இருந்தது. அது எல்லா ஒப்பந்தங்களிலும் இடம் பெறுவதுதான்.
நான் அப்போது சினிமாவிற்கு புதியது. வழக்கறிஞர் கொடுக்கிறார். அதை அவருக்கு அனுப்பினேன் அவ்வளவுதான். அதற்கு அமீர் என் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பது போல,அந்த ஒப்பந்தம் இருப்பதாக சாடினார்.
அதற்கு நான், அண்ண, உங்களை நம்பி தான் நான் சினிமாவிற்கு வருகிறேன். உங்களை காயப்படுத்தி, யாரிடமும் இதைப்பற்றி நான் புகார் சொல்லப் போவதில்லை என்று சொன்னேன். ஆனால் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வில்லை. படத்திற்கான பூஜை போட்டோயிற்று. கார்த்தி பருத்திவீரன் கெட்டப்பில் தயாராக உட்கார்ந்திருக்கிறார்
ஆறு மாதங்களில் படத்தை முடிக்கிறேன் என்று சொன்னவர், அந்த படத்தை இரண்டரை வருடங்கள் எடுத்தார். 163 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. 2 லட்சத்து 78 ஆயிரம் அடி எக்ஸ்போஸ் வந்தது. அப்போதெல்லாம் பிலிம் ஃபிலிம் ரோல் தான். என்னிடம் எல்லா கணக்கும் தெளிவாக இருக்கிறது இப்போது வந்தால் கூட லேபில் இருந்து எடுத்துக்காட்டி விடுவேன். உண்மையில் அதற்கு அந்த நேரத்தில் நான்கு படங்களை எடுக்கலாம்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது அமீர்ர்தான். அதில் என்னுடைய பெயர், சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஐயா உள்ளிட்டோரின் பெயரும் இடம் பெற்று இருந்தது.
உண்மையில் இப்போது அவர் பேட்டிகளில் சூர்யாவுடன் நான் நட்பாக இருந்தேன். ராஜாதான் எங்களை பிரித்து விட்டார் என்று சொல்கிறார். இது எதற்காகவென்றால், வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கிறார். இந்த வெறுப்பை மனதில் வைத்து, சூர்யா அமீரை வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்பதற்காகவே அவர் இப்படி பேசுகிறார்.
அமீருக்கு மனதில் பாரதிராஜா என்று நினைப்பு. அவருக்கு அந்த அளவுக்கு சீன் சீன் கிடையாது. இன்றைக்கு இல்லை என்றைக்குமே அவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இருக்காது.
பருத்திவீரன் படத்தில், கணக்கு கேட்கும் பொழுது அமீர் படத்தில் 250 பன்னிகளை பயன்படுத்தியதாக கணக்கு கொடுத்திருந்தார் ஆனால் படத்தில் தெரிவதோ 25 அல்லது 30 பன்னிகள்தான் அதற்கு காரணம் கேட்ட போது, படப்பிடிப்பில் சில பன்னிகள் இறந்து விட்டது என்றும் சில பன்னிகள் ஃபிரேமில் தெரியவில்லை என்றும் கூறினார். அப்படி, எங்கள் அண்ணன் பன்னிக்கணக்கையே பத்து விதமாக எழுதியவர்
அந்தப்படம் அன்றைக்கு 25 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதில் அவர் பர்சனல் ஆக எந்த அளவு பயன் அடைந்தார் என்பதும், எந்த விதத்தில் எனக்கு கெடுதல் செய்தார் என்பதும் எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் வெளி உலகத்தில் அவர் வேஷம் போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்