தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gitanjali Selvaraghavan: ‘செக்ஸ் வச்சிக்கிறதே அலுத்துப்போய்.. பிரண்ட்ஷிப் மட்டும் இருந்தா’ - கீதாஞ்சலி செல்வராகவன்!

Gitanjali Selvaraghavan: ‘செக்ஸ் வச்சிக்கிறதே அலுத்துப்போய்.. பிரண்ட்ஷிப் மட்டும் இருந்தா’ - கீதாஞ்சலி செல்வராகவன்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 16, 2024 06:00 AM IST

காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருவருக்குள்ளும் ஒரு விதமான ஸ்பார்க் இருக்கும். காலப்போக்கில் அந்த ஸ்பார்க், மேஜிக் உள்ளிட்டவையெல்லாம் அப்படியே கரைந்து விடும்.

கீதாஞ்சலி செல்வராகவன்!
கீதாஞ்சலி செல்வராகவன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ஒரு உறவில் இருக்கும் இருவருக்குள், ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் பொழுது, அந்த உறவை மீண்டும் கை கொள்ள, இருவரும் முதலில் உட்கார்ந்து, மனதில் உள்ளதை ஓப்பனாக பேச வேண்டும்.

முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.

அந்த உறவில் இருவருக்கும் முழு சுதந்திரம் இருக்க வேண்டும். என்னுடைய மனதில் பட்டதை நான் என்னுடைய பார்ட்னரிடம் சொல்லும் பட்சத்தில், அவர் அதனை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார், என்னை எடை போட மாட்டார் என்ற நம்பிக்கையை கொண்டுவர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இருவருக்குள்ளும் ஒரு நல்ல பிரண்ட்ஷிப் இருக்க வேண்டும்

செக்ஸ் கரைந்து விடும்

காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருவருக்குள்ளும் ஒரு விதமான ஸ்பார்க் இருக்கும். காலப்போக்கில் அந்த ஸ்பார்க், மேஜிக் உள்ளிட்டவையெல்லாம் அப்படியே கரைந்து விடும். 

ஒரு கட்டத்தில் நீங்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதே, உங்களுடைய உடம்பின் தேவைக்காக மட்டுமானதாக மாறிவிடும். ஆனால், உங்களுக்குள் ஒரு நல்ல பிரண்ட்ஷிப் இருந்தால் மீண்டும் அந்த ஸ்பார்க்கை கொண்டு வந்து விட முடியும்.

செல்வராகவன் வாழ்க்கையில் வந்த பின்னர் மாற்றம்:

நான் செல்வராகவன் வாழ்க்கையில் வந்த பின்னர், அவர் நிறைய மாறி இருக்கிறார் என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர் அவருக்காக உழைத்தார். அதற்கு நான் துணையாக இருந்தேன் அவ்வளவுதான். அதேபோல நானும் என்னுடைய கஷ்டகாலத்தில் போராடிக்கொண்டிருக்கும் போது, அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். 

நாங்கள் கல்யாணம் முடிந்த ஆரம்ப கட்டத்திலேயே நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டோம். என்னுடைய மனம் மற்றும் உடல்நல பாதிப்பு, அவருடைய மனம் மற்றும் உடல்நல பாதிப்பு, இது தவிர பொருளாதார நெருக்கடிகள், வேலை நிமித்தமான பிரச்சினைகள் என நிறைய பார்த்தாயிற்று. இப்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், அப்போது பார்க்காத பிரச்சனைகளா என்ற எண்ணம் தான் எங்களுக்குள் வருகிறது.

பார்ட்னரை நம்ப வேண்டும்.

அந்த மாதிரியான நெருக்கடியான காலகட்டங்களில் நீங்கள் உங்களுடைய பார்ட்னரை நம்ப வேண்டும். நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம். ஒருவருக்கு பிரச்சினை வரும் பொழுது, இன்னொருவர் பக்க பலமாக நின்று, அதிலிருந்து அவர்கள் வெளியே வருவதற்கு உதவினோம்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு - தனிப்பட்ட கருத்துக்கள்

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்