Gitanjali Selvaragavan: ‘தாய்ப் பாலே வரல.. 110 கிலோ வரை எடை கூடி .. குற்ற உணர்வுல உடைஞ்சே போயிட்டேன்’ - கீதாஞ்சலி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gitanjali Selvaragavan: ‘தாய்ப் பாலே வரல.. 110 கிலோ வரை எடை கூடி .. குற்ற உணர்வுல உடைஞ்சே போயிட்டேன்’ - கீதாஞ்சலி!

Gitanjali Selvaragavan: ‘தாய்ப் பாலே வரல.. 110 கிலோ வரை எடை கூடி .. குற்ற உணர்வுல உடைஞ்சே போயிட்டேன்’ - கீதாஞ்சலி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 21, 2024 06:25 AM IST

அவர், மாதவிடாய் காலத்தில் நடக்கக்கூடிய பலவிதமான மாற்றங்களை விட, அதீத மாற்றங்கள் இந்த காலகட்டத்தில் இருக்கும். நீ மன அழுத்தத்தில் சிக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்திருந்தார்.

கீதாஞ்சலி செல்வராகவன்!
கீதாஞ்சலி செல்வராகவன்!

இது குறித்து அவர் பேசும் போது,  “முதல் தடவை நான் கர்ப்பமாக தரித்த போது, எனக்கு பெரியளவில் பிரச்சினை ஏற்படவில்லை. உடல் எடை மட்டுமே குறைந்து இருந்தது. ஆனால் அதன் பின்னர், கிட்டத்தட்ட 20 கிலோ எடை வரை கூடினேன். 

முன்னதாக, எனக்கு இடுப்பில் ஒரு சின்ன பிரச்சினை இருந்தது. அதன் காரணமாக, எனக்கு அறுவை சிகிச்சை முறையிலேயே குழந்தை பெற்றெடுக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. 

ஆனால் குழந்தை பிறந்ததற்கு பின்னர் நான் எப்படியான மனநிலையில் இருப்பேன் என்பதை நான் யூகிக்க வில்லை. முன்னதாகவே என்னுடைய அம்மா இது குறித்து எச்சரிக்கை செய்திருந்தார். 

அவர், மாதவிடாய் காலத்தில் நடக்கக்கூடிய பலவிதமான மாற்றங்களை விட, அதீத மாற்றங்கள் இந்த காலகட்டத்தில் இருக்கும். நீ மன அழுத்தத்தில் சிக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்திருந்தார். 

ஆனால், நான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அப்படிப்பட்ட மன அழுத்தம் எல்லாம் நமக்கு வராது என்று அலட்சியமாக இருந்து விட்டேன்.

ஆனால் எனக்கு மனஅழுத்தம் பயங்கரமாக வந்தது. முதல் குழந்தை பிறந்த பின்னர், எனக்கு தாய்ப்பால் வேறு வரவில்லை. அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனையடுத்து நான் அதை சரி செய்வதற்காக கூகுளில் தகவல்களை திரட்டி என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். 

ஆனால் எதுவும் வொர்க் அவுட் ஆக வில்லை. அது என்னை மேலும் மன அழுத்ததில் தள்ளியது. என்னுடைய தூக்கம் பறிபோனது. குழந்தை லீலாவும் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தாள். 

என்னுடைய மார்பகத்தில் இருந்து அவளுடைய வாயை எடுத்து விட்டால், அவளது தூக்கம் பறிபோய்விடும். நானும் தூங்காமல் அழுது கொண்டிருப்பேன். 

இந்த நிலையில்தான் ஒரு நாள் என்னுடைய அம்மா செல்வாவிடம் லீலாவை தூக்கிச்செல்வதாகவும், என்னை எப்படியாவது நிம்மதியாக தூங்க வைக்க வேண்டும் என்று சொல்லி கிளம்பி விட்டார். 

இதையடுத்து, நான் செல்வாவிடம் எப்படி என்னுடைய குழந்தையை எடுத்துச் செல்ல அனுமதிப்பீர்கள் என்று சொல்லி கடுமையாக சண்டையிட்டேன். அந்த நேரத்தில் செல்வா என்னை எப்படியோ சமாளித்து தூங்க வைத்தார்.  அப்போது கிட்டத்தட்ட 15 மணி நேரம் தொடர்ச்சியாக நான் தூங்கினேன்.

அந்த சமயத்தில் நான் கண்டதை, கண்ட நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பசியால் அல்ல; எனக்கு சாப்பிட வேண்டும் என்பது போல தோன்றியது சாப்பிட்டேன். இதற்கிடையில் மீண்டும் நான் கர்ப்பமாக மாறிவிட்டேன். இதை பார்த்த மருத்துவர் இது சரியில்லை என்று  எச்சரித்தார். ஆனால் நான் வலுக்கட்டாயமாக இந்த குழந்தை எனக்கு வேண்டும் என்று சொல்லி பெற்றுக் கொண்டேன். 

அதன் பலன் எனக்கு எல்லாவித பிரச்சினைகளும் வந்துவிட்டது. கூடவே வேலையையும் நான் சேர்த்து பார்த்துக் கொண்டிருந்தேன். இதனால், கிட்டத்தட்ட 110 கிலோ எடை வரை கூடி விட்டேன். எல்லோரும் என்னை எச்சரித்தார்கள். ஆனால் நான் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் என்னை சரி செய்ய வேண்டும் என்று எனக்கே தோன்றியது இதையடுத்து நான் அனைவரிடமும் பேசி, எனக்காக ஒரு பிரேக் எடுத்து மருத்துவரிடம் சென்றேன். எடையை குறைத்தேன். 

குழந்தை பெற்றுக் கொண்ட அம்மாக்கள் முதல் 45 நாட்கள், அவர்களது உடல் நலத்தையும், மனநலத்தையும் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்களுடைய குழந்தையை பார்த்துக் கொள்ள முடியும்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.