கெட்டிமேளம் சீரியல் மார்ச் 26 எபிசோட்: முருகன் கொடுத்த அதிர்ச்சி.. துளசியை மடக்கிய வெற்றி, அப்செட்டில் மகேஷ்
கெட்டிமேளம் சீரியல் மார்ச் 26 எபிசோட்: அஞ்சலிக்கு பால்கோவா கொடுத்து முருகன் அதிர்ச்சி கொடுக்க, துளசியை மடக்கி மருத்துவமனை அழைத்து செல்கிறான் வெற்றி. திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோட் செல்ல இருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் முக்கியமான மீட்டிங் இருப்பதாக சொல்லி அஞ்சலியை அழைத்து கொண்டு கிளம்ப தயாரான நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அஞ்சலியிடம் கோபித்து கொள்ளும் முருகன்
அதாவது, மகேஷ் மற்றும் அஞ்சலி என இருவரும் கிளம்பியதும் முருகன் பால்கோவாவுடன் வீட்டுக்கு வருகிறான். அஞ்சலி எங்கே என்று கேட்க, கிளம்பி விட்டதாக சொன்னதும் காரை மடக்கி பிடிக்க ஓடி வருகிறான்.
இங்கே மகேஷ் மண்டைக்குள் அர்ஜுன் என்ற பெயர் ஓடி கொண்டே இருக்கிறது. இந்த சமயத்தில் முருகன் குறுக்கே வந்து நிற்க மகேஷ் அதிர்ச்சி அடைகிறான். அஞ்சலி கீழே இறங்கியதும் ஏன் சொல்லாமல் வந்துட்ட என கோபித்து கொள்கிறான். பிறகு பல்கோவை கொடுக்க அஞ்சலி எமோஷன் ஆகிறாள்.
துளசியுடன் மருத்துவமனை செல்லும் வெற்றி
அடுத்து வெற்றி துளசிக்கு போன் செய்து ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும் வாங்க, இல்லனா வீட்டில் விஷயத்தை சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறான். துளசி முக்கியமான வேலை இருப்பதாக பொய் சொல்லி கிளம்பி வருகிறாள். அதே போல் வெற்றி வீட்டில் கம்பெனிக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு கிளம்பி வருகிறான். மேலும் டாக்டரிடமும் என்ன சொல்லணும் என்று சொல்லி செட்டப் செய்து விடுகிறான்.
வெற்றியை பரிசோதனை செய்த டாக்டர் அடி பெரிய அளவில் பட்டு இருப்பதாக சொல்கிறார். நீங்க யார்? அவருடைய மனைவியா என்று துளசியிடம் கேட்க, வெற்றி சந்தோசப்படுகிறான். துளசி இல்லை சொந்தக்காரர் பையன் என்று சொல்கிறாள். அடுத்து வெற்றி நடக்க முடியல கொஞ்சம் கையை பிடிச்சிக்கவா என்று கேட்க, துளசி வீல் சேர் கொண்டு வருவதாக சொல்கிறாள். ஆனால் வெற்றி வேண்டாம் என சொல்லி விடுகிறான்.
இதையடுத்து இங்கே துளசி, மகேஷிடம் அடுத்த முறை கண்டிப்பா 5 நாள் இருந்துட்டு தான் வரணும் என பேசி கொண்டே இருக்க, அர்ஜுன் என்று சொன்னதை பற்றியே மகேஷ் யோசிக்கிறான். இந்த சமயத்தில் அஞ்சலிக்கு இரும்பல் வர, மகேஷ் அவளுக்கு மாத்திரை கொடுத்து ரெஸ்ட் எடுக்க சொல்கிறான்.
டாக்டரை அடிக்கும் மகேஷ்
அடுத்த நாள் ஹாஸ்பிடல் அழைத்து வர டாக்டர் அஞ்சலியை தொட்டு பார்த்து பரிசோதனை செய்கிறார். பின்னர் அஞ்சலியை வெளியே வெயிட் பண்ண சொல்லி விட்டு மகேஷ், என் அஞ்சலி மேலயா கையை வச்ச என்று டாக்டர் கையை பிடித்து உடைக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்