கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: அஞ்சலியை பாட வைத்து கொடுமைப்படுத்தும் மகேஷ்..வெற்றியைத் திட்டித்தீர்க்கும் துளசி!
கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: தூங்கிக் கொண்டிருக்கும் அஞ்சலியை எழுப்பி, எனக்காக ஒரு பாட்டு பாடு என சொல்லி இரவு முழுவதும் தூங்க விடாமல் பாட வைத்து கொடுமைப்படுத்துகிறான்.

அஞ்சலியை பாட வைத்து கொடுமைப்படுத்தும் மகேஷ்.. அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், அஞ்சலி பார்ட்டியில் பாட, மகேஷ் டென்ஷனான நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
டென்ஷன் ஆகிறான்.
அதாவது பார்ட்டி அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது என்று அஞ்சலி சொல்லியபடி வீட்டுக்கு வருகிறாள். வீட்டுக்கு வந்ததும் அஞ்சலி தூங்கச் செல்ல, மகேஷ் நடந்ததை நினைத்து நினைத்து டென்ஷன் ஆகிறான்.
அதன் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அஞ்சலியை எழுப்பி, எனக்காக ஒரு பாட்டு பாடு என சொல்லி இரவு முழுவதும் தூங்க விடாமல் பாட வைத்து கொடுமைப்படுத்துகிறான். அடுத்த நாள் காலையில் அஞ்சலியிடம் மன்னிப்பு கேட்கும் மகேஷ், தான் வேண்டும் என்றே தான் இப்படி செய்ததாக சொல்ல, அஞ்சலி அதிர்ச்சி அடைகிறாள்.
அழகு, பாட்டு எல்லாமே எனக்குதான் சொந்தம்
உன்னுடைய அழகு, பாட்டு எல்லாமே எனக்கு மட்டும்தான் சொந்தம். மத்தவங்க பாட சொன்னாங்கன்னு நீ எப்படி பார்ட்டியில பாடலாம் என திட்டுகிறான். பிறகு ஆபிசுக்கு கிளம்பும் மகேஷ், அஞ்சலி தன்னை பற்றி தப்பாக நினைத்திருப்பாளோ என மீண்டும் யோசித்து யோசித்து டென்ஷன் ஆகிறான்.
இதனையடுத்து அஞ்சலியிடம் சென்ற மகேஷ் அவளிடம் மன்னிப்புக்கேட்டு, நான் இப்படி பண்ணி இருக்கக் கூடாது என சொல்கிறான். அதைக்கேட்ட அஞ்சலி அவனை மன்னிக்க, மகேஷ் அஞ்சலி மடியில் படுத்து கொண்டு சிரிக்க ஒரு கட்டத்தில் அனைத்தும் நடிப்பு என தெரிய வருகிறது.
அதன் பிறகு துளசி வெற்றியை அழைத்து அவனிடம் நல்லபடியாக பேச, வெற்றியும் துளசி தன்னை புரிந்து கொண்டதாக நினைத்து சந்தோஷப்பட்ட வேளையில், துளசி அவனை திட்டி தீர்க்க வெற்றி அதிர்ச்சி அடைகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்