கெட்டிமேளம் சீரியல் மார்ச் 13 எபிசோட்: வெற்றியிடம் துளசி வைத்த கோரிக்கை.. அஞ்சலியின் கேள்வியால் திக்குமுக்காடிய மகேஷ்!
வெற்றி லக்ஷ்மியின் வீட்டிற்கு வருகிறான், சிவராமன் வெற்றியை வரவேற்று வேலைக்கு கிளம்புறேன்; சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லி கிளம்பி செல்கிறார். - கெட்டிமேளம் சீரியலில் இன்று!

வெற்றியிடம் துளசி வைத்த கோரிக்கை.. அஞ்சலியின் கேள்வியால் திக்குமுக்காடிய மகேஷ் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் அஞ்சலிக்கு ஒரு பொம்மையை கிஃப்டாக கொடுத்து சமாதானம் செய்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வரவேற்ற சிவராமன்
அதாவது, வெற்றி லக்ஷ்மியின் வீட்டிற்கு வருகிறான், சிவராமன் வெற்றியை வரவேற்று வேலைக்கு கிளம்புறேன்; சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லி கிளம்பி செல்கிறார்.
பிறகு வெற்றி லக்ஷ்மியுடம் உங்க பொண்ணும் வேலைக்கு கிளம்பியாச்சா என்று கேட்க, இல்ல அவ இப்போ தான் வேலை தேடிட்டு இருக்கா என்று சொல்கிறாள். வெற்றி எனக்கு தெரிந்த ஒரு கம்பெனியில் சிபாரிசு செய்வதாக சொல்ல, வெளியே வந்த துளசி, யாருடைய உதவியும் தேவையில்லை என்று பதில் கொடுக்கிறாள்.
அடுத்து துளசி, இன்டெர்வியூவுக்கு கிளம்ப வெற்றியும் கிளம்ப, லட்சுமி வெற்றியிடம் துளசியை பஸ் ஸ்டாண்டில் டிராப் செய்ய சொல்கிறாள். வெற்றி கம்பெனியிலேயே விட்டு விடுகிறேன் என்று சொல்ல, அம்மா சொன்னதால் தவிர்க்க முடியாமல் துளசியும் வெற்றியுடன் செல்கிறாள்.
அடுத்து வெற்றி இன்டெர்வியூ முடிச்சிட்டு வாங்க நானே வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொல்ல, துளசி அதெல்லாம் வேண்டாம் என்று திட்டி செல்கிறாள். இன்டெர்வியூவில் துளசி 30,000 ரூபாய் சம்பளம் கேட்க மேனேஜர் 20,000 தான் தர முடியும் என்று சொல்லி விடுகிறார்.
இதையெல்லாம் வெளியே இருந்து கேட்ட வெற்றி மேனேஜருக்கு போன் போட்டு, அந்த பொண்ணுக்கு வேலை போட்டு கொடு.. 20,000 நீ குடு, 30,000 நான் தரேன். மொத்தமாக 50,000 சம்பளம்னு சொல்லு என்று சொல்கிறான்.
வெற்றிக்கே மீண்டும் போன்
பிறகு மேனேஜர் துளசிக்கு வேலை போட்டு கொடுக்க ஆவலுடன் சந்தோசமாக கிளம்பி வருகிறாள். வெற்றி அவளை பாலோ செய்ய, துளசி வெற்றிக்கே போனை போட்டு, அவனிடமே என்னை ஒருத்தர் பாலோ பன்றான். அவனை கண்டிச்சு வைக்க சொல்லி, உதவி கேட்கிறாள். இதன்மூலம், தியாவின் அம்மாவாக போனில் பேசியது துளசிதான் என்பது வெற்றிக்கு தெரிய வருகிறது.
மறுபக்கம் மகேஷ், அஞ்சலி சாப்பிட்டு கொண்டிருக்க அப்போது மகேஷ் நீ கதவு, ஜன்னலை திறக்க முயற்சி பண்ணியா என்று கேட்க, துளசி ஆமாம், அது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டாள். அதைக்கேட்ட அவன் சும்மா கேட்டேன் என்று சொல்லி சமாளிக்கிறான். அஞ்சலி நீங்க வாங்கி கொடுத்த பொம்மை நான் சொன்னதை தான் திருப்பி சொல்லுது எனக்கு போர் அடிக்குது என்று சொல்கிறாள்.
இங்கே வீட்டிற்கு வந்த துளசி வேலை கிடைத்த விஷயத்தை சந்தோசமாக சொல்கிறாள். அடுத்து வெற்றி தியாவிடம் உங்க அம்மா கிட்ட நான் தான் உன்னை காப்பாத்தினேன் என்ற விஷயத்தை சொல்லிட்டியா என்று கேட்க, தியா இல்லை என்று சொல்ல வெற்றி அப்படியே விட்டுடு எப்பவும் சொல்லாத என்று சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

டாபிக்ஸ்