கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: சந்தேகத்தால் உருவாகும் உச்சக்கட்ட டென்ஷன்! -ஷாக் கொடுத்த துளசி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: சந்தேகத்தால் உருவாகும் உச்சக்கட்ட டென்ஷன்! -ஷாக் கொடுத்த துளசி

கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: சந்தேகத்தால் உருவாகும் உச்சக்கட்ட டென்ஷன்! -ஷாக் கொடுத்த துளசி

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 16, 2025 02:45 PM IST

கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: ஆபீஸ் விஷயமாக மீனாட்சியின் ஏற்பாட்டின் படி தான் துளசி இங்கு வந்தது தெரிய வருகிறது. மீனாட்சி துளசியை வரவேற்பு வீட்டிற்குள் அழைத்துச் செல்ல எல்லோரும் துளசியை நலம் விசாரித்து உபசரிக்கின்றனர்.

கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: சந்தேகத்தால் உருவாகும் உச்சக்கட்ட டென்ஷன்! -ஷாக் கொடுத்த துளசி
கெட்டிமேளம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: சந்தேகத்தால் உருவாகும் உச்சக்கட்ட டென்ஷன்! -ஷாக் கொடுத்த துளசி

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் தங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றிக்கு எங்கு பார்த்தாலும் துளசியை இருப்பது போலவே தோன்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

திடீரென்று வந்த துளசி

அதாவது, வெற்றி தனது நண்பர்களிடம் எங்கு பார்த்தாலும் துளசியை பார்ப்பது போலவே இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்க, அப்போது அவனுக்கு எதிரில் துளசி நடந்து வருவது போல் இருக்கிறது என்று சொல்ல, அவனது நண்பர்கள் எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு என்று சொல்ல உண்மையாகவே துளசி வெற்றி வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

ஆபீஸ் விஷயமாக மீனாட்சியின் ஏற்பாட்டின் படி தான் துளசி இங்கு வந்தது தெரிய வருகிறது. மீனாட்சி துளசியை வரவேற்பு வீட்டிற்குள் அழைத்துச் செல்ல எல்லோரும் துளசியை நலம் விசாரித்து உபசரிக்கின்றனர்.

மறுபக்கம், அஞ்சலி யாருடன் பேசுகிறாள் என்று புரியாமல் தவிக்கும் மகேஷ் வீட்டிற்கு கிளம்பி வருகிறான். அதனைப்பார்த்த அஞ்சலி என்ன சீக்கிரமா வந்துட்டீங்க என்று கேட்க, உடம்பு ஒரு மாதிரி இருந்தது. அதனால் வந்து விட்டதாக சொல்கிறான்.

மேலும், மகேஷ் நேத்து நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்க, அஞ்சலி அதெல்லாம் பரவால்ல என்று சொல்கிறாள். உங்க வீட்ல ஃபோனில் பேசுனியா? குரலை வைத்து உனக்கு உடம்பு சரியில்லன்னு கண்டுபிடிச்சிட போறாங்க என்று சொல்ல அதான் கண்டுபிடிச்சிட்டாங்க அம்மா கிட்ட தான் பேசிட்டு இருந்தேன் என்று சொல்ல மகேஷ் ஷாக் ஆகிறான்.

ரகுராமும் அவனது மனைவியும் கவிதாவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என பொய் சொல்லி விட்டு ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் சென்று வருகின்றனர். மேலும், கவிதா அம்மாவுக்கு போன் போட்டு உனக்கு உடம்பு சரியில்லாமல் சொல்லி இருப்போம்.. அது அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கோ என்று சொல்கிறாள்.

அடுத்து மகேஷ் உன் குரல் சரியாக நான் ஒரு வைத்தியம் பண்றேன் என்று சொல்லி கசாயம் போட அந்த சமயத்தில் லட்சுமி மீண்டும் அஞ்சலிக்கு போன் செய்கிறாள். அப்போது, மகேஷ் ஃபோனை எடுத்து பேசுகிறான். லட்சுமி அஞ்சலிக்காக ஒரு கசாயத்தை வைத்து கொடுக்க சொல்ல மகேஷ் அந்த கசாயத்தை தான் ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்கிறான்.

இதை கேட்ட லட்சுமி என் பொண்ணை ரொம்ப நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள் என்னை சந்தோஷப்படுகிறாள். பிறகு இரவு ஆனது வீடியோ கால் மூலம் அஞ்சலியிடம் பேசுகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.