கெட்டி மேளம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: வீட்டை விட்டு கிளம்பிய துளசி.. தியாவால் வெளிவருமா மகேஷின் நிஜ முகம்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெட்டி மேளம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: வீட்டை விட்டு கிளம்பிய துளசி.. தியாவால் வெளிவருமா மகேஷின் நிஜ முகம்?

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: வீட்டை விட்டு கிளம்பிய துளசி.. தியாவால் வெளிவருமா மகேஷின் நிஜ முகம்?

Malavica Natarajan HT Tamil
Published Jun 06, 2025 03:57 PM IST

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: முருகனுக்கும் ரேவதிக்கும் தனியாக இருக்க அவகாசம் தர வேண்டும் என நினைத்து துளசி தியாவை கூட்டிக் கொண்டு அஞ்சலி வீட்டிற்கு வருகிறாள்.

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: வீட்டை விட்டு கிளம்பிய துளசி.. தியாவால் வெளிவருமா மகேஷின் நிஜ முகம்?
கெட்டி மேளம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: வீட்டை விட்டு கிளம்பிய துளசி.. தியாவால் வெளிவருமா மகேஷின் நிஜ முகம்?

உண்மையை சொன்ன டாக்டர்

அதாவது அஞ்சலி அவளை பைக்கில் உட்கார வைத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து அட்மிட் செய்கிறாள். மகேஷை பரிசோதனை செய்த டாக்டர் ஒன்னும் பயப்படத் தேவையில்லை என்று சொல்கிறார். அதே நேரத்தில் இது முதல்முறையாக வந்திருக்காது சின்ன வயசுல கண்டிப்பா ஏற்கனவே இந்த மாதிரி பேனிக் அட்டாக் வந்திருக்கும் என்று சொல்கிறார்.

வருத்தப்படும் துளசி

அடுத்த நாள் காலையில் முருகன் ரேவதி ஹாலில் படுத்திருப்பதை பார்த்த ரகுவரன் குழந்தை எல்லாம் இருக்காங்க இப்படி அநாகரிகமா நடந்துக்கலாமா என்று பேசி அவமானப்படுத்துகிறான். இதை பார்த்து துளசி வருத்தப்படுகிறாள்.

அஞ்சலி சொன்ன ஐடியா

பிறகு துளசி அஞ்சலிக்கு போன் செய்ய அஞ்சலி டல்லாக பேசுவதை பார்த்து என்னாச்சு என்று விசாரிக்க மகேஷ் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்கிறாள். பிறகு துளசி வீட்டில் நடந்த விஷயத்தை சொல்ல அஞ்சலி நீயும் தியா பாப்பாவும் கொஞ்ச நாளைக்கு எங்க வீட்ல வந்துருங்க.. அண்ணனும் அண்ணியும் உன்னோட ரூம்ல தங்கிப்பாங்க என்று ஐடியா கொடுக்க துளசியின் தியாவுடன் வருவதாக வாக்கு கொடுக்கிறாள்.

கண் கலங்கிய அஞ்சலி

அதன் பிறகு அஞ்சலி வீட்டில் கொஞ்ச நாள் தங்கி விட்டு வருவதாக சொல்லி தியாவுடன் துளசி கிளம்பி வருகிறாள். முருகன் அஞ்சலிக்கு பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்து துளசியை வழி அனுப்பி வைக்கிறான். அதனை தொடர்ந்து ஹாஸ்பிடலில் மகேஷ் கண்டுபிடிக்க அஞ்சலி என்னங்க ஆச்சி நான் ரொம்ப பயந்துட்டேன் என்று கண் கலங்குகிறாள். மகேஷ வரதராஜன் நிலத்தை தர மாட்டேன் என்று சொல்லி விட்டதாக சொல்கிறான்.

நெருக்கமாகும் மகேஷ்- தியா

அதன் பிறகு மகேஷை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வர தியா மற்றும் அஞ்சலியும் வந்து விடுகின்றனர். மகேஷ் மற்றும் தியா இருவரும் நெருக்கமாகி விடுகின்றனர். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த தியா பொருட்களை இடம் மாற்றி வைத்து விடுகிறாள்.

உண்மை முகம் வெளிவருமா?

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? பொருட்கள் இடம் மாறியதை பார்த்து மகேஷ் செய்யப் போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.