கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: தூங்க அடம்பிடிக்கும் முருகன்.. நெஞ்சு வலியில் துடிக்கும் மகேஷ்.. கெட்டி மேளம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: தூங்க அடம்பிடிக்கும் முருகன்.. நெஞ்சு வலியில் துடிக்கும் மகேஷ்.. கெட்டி மேளம்

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: தூங்க அடம்பிடிக்கும் முருகன்.. நெஞ்சு வலியில் துடிக்கும் மகேஷ்.. கெட்டி மேளம்

Malavica Natarajan HT Tamil
Published Jun 05, 2025 04:02 PM IST

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: ரேவதியை கல்யாணம் செய்த பின்னும் பாட்டியுடன் தான் தூங்குவேன் என முருகன் அடம்பிடித்து வருகிறான்.

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: தூங்க அடம்பிடிக்கும் முருகன்.. நெஞ்சு வலியில் துடிக்கும் மகேஷ்.. கெட்டி மேளம்
கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: தூங்க அடம்பிடிக்கும் முருகன்.. நெஞ்சு வலியில் துடிக்கும் மகேஷ்.. கெட்டி மேளம்

முருகனுக்கு ஆதரவாக நிற்கும் சிவராமன்

அதாவது முருகன் ரேவதி மாலையும் கழுத்துமாக வந்து நிற்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரகுவரன் இனிமேல் தான் இந்த வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது என்று சொல்லி சத்தம் போடுகிறான். இதனால் முருகன் ரேவதி உடன் அங்கிருந்து கிளம்ப தயாராக சிவராமன் தடுத்து நிறுத்துகிறார்.

அடம்பிடிக்கும் முருகன்

இது என்னுடைய வீடு இங்கு யார் இருக்கனும் இருக்கக் கூடாது என்பதை நான் தான் முடிவு பண்ணணும். முருகன் என் மூத்த பையன் அவன் இந்த வீட்ல தான் இருப்பான் என்று சொல்லி அவனை வீட்டுக்குள் அழைக்கிறார்.

அதைத்தொடர்ந்து முருகன் ரேவதி விஷயத்தை நடந்த அனைத்தையும் சொல்கிறான். இருவரும் ஹாலில் இருக்க துளசி நானும் தியாவும் பாட்டி கூட படுத்துக்குறோம்.. நீங்க ரெண்டு பேரும் ரூம்ல போய் தூங்குங்க என்று சொல்கிறாள். ஆனால் முருகன் தனக்கு பாட்டி பக்கத்தில் இருந்தால்தான் தூக்கம் வரும் என்று சொல்லி விடுகிறான்.

நெஞ்சு வலியில் மகேஷ்

அதெல்லாம் சரி ஆனால் இப்போ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று சொல்லி புரிய வைக்க முயற்சி செய்ய முருகன் தனது முடிவில் இறுதியாக இருக்கிறான். அடுத்த நாள் வரதராஜன் மகேஷுக்கு போன் செய்து நிலத்தை தரவில்லை என்று சொல்ல இதை கேட்டு மகேஷுக்கு நெஞ்சு வலி வருகிறது.

தவிக்கும் அஞ்சலி

உடனே அஞ்சலி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். அதன் பிறகு மகேஷை பைக்கில் உட்கார வைத்து அவன் கீழே சாய்ந்து விடாதபடி துணியால் இருக்கி தனது வயிற்றுடன் கட்டிக் கொண்டு அஞ்சலி ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கலங்கிய ரேவதி

ரேவதி கலங்கிப் போய் இருக்க முருகன் உனக்காக நான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான். இதை அடுத்து சிவராமன் நண்பனிடம் எவ்வளவு நாளைக்கு இப்படி பார்க்கிலேயே உக்காந்துட்டு இருக்கிறது ஏதாவது வேலையை தேடனும் என்று சொல்ல சிவராமன் கேட்டரிங் வேலை ஒன்றை கேட்டு வைத்திருப்பதாக சொல்கிறார்.

திருமணத்திற்கு சம்மதம்

அடுத்து ரேவதி கடைக்கு யாரும் வராமல் அவரது நடத்தையைப் பற்றி தப்பாக சொல்லி பேச ரேவதி மனம் உடைந்து போய் தற்கொலை முயற்சி செய்யக் செல்கிறாள். கடைசி நொடியில் காப்பாற்றும் முருகன் புவனாவிடம் விஷயத்தை சொல்லி ரேவதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சொல்ல புவனாவும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள்.