கெட்டி மேளம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: மாலையும் கழுத்துமாக வந்து நின்று ஷாக் கொடுத்த முருகன்.. கெட்டி மேளம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெட்டி மேளம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: மாலையும் கழுத்துமாக வந்து நின்று ஷாக் கொடுத்த முருகன்.. கெட்டி மேளம் சீரியல்

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: மாலையும் கழுத்துமாக வந்து நின்று ஷாக் கொடுத்த முருகன்.. கெட்டி மேளம் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Jun 04, 2025 03:55 PM IST

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: ரேவதியை கல்யாணம் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நின்று முருகன் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறான்.

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: மாலையும் கழுத்துமாக வந்து நின்று ஷாக் கொடுத்த முருகன்.. கெட்டி மேளம் சீரியல்
கெட்டி மேளம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: மாலையும் கழுத்துமாக வந்து நின்று ஷாக் கொடுத்த முருகன்.. கெட்டி மேளம் சீரியல்

கலங்கிய ரேவதி

அதாவது, ரேவதி கலங்கிப் போய் இருக்க முருகன் உனக்காக நான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான். இதை அடுத்து சிவராமன் நண்பனிடம் எவ்வளவு நாளைக்கு இப்படி பார்க்கிலேயே உக்காந்துட்டு இருக்கிறது ஏதாவது வேலையை தேடனும் என்று சொல்ல சிவராமன் கேட்டரிங் வேலை ஒன்றை கேட்டு வைத்திருப்பதாக சொல்கிறார்.

திருமணத்திற்கு சம்மதம்

அடுத்து ரேவதி கடைக்கு யாரும் வராமல் அவரது நடத்தையைப் பற்றி தப்பாக சொல்லி பேச ரேவதி மனம் உடைந்து போய் தற்கொலை முயற்சி செய்யக் செல்கிறாள். கடைசி நொடியில் காப்பாற்றும் முருகன் புவனாவிடம் விஷயத்தை சொல்லி ரேவதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சொல்ல புவனாவும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள்.

சங்கடத்தில் வெற்றி

இன்னொரு பக்கம் வெற்றியின் அம்மா நான் சொல்ற பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும் என்று வெற்றியிடம் சத்தியம் வாங்குகிறாள். லட்சுமி முருகன் ரேவதிக்கு ஒருத்தர் ஒருத்தர புடிச்சிருக்கு ரேவதி ஓட அம்மாகிட்ட பேசி அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்கிறாள்.

கோவத்தில் ரகுவரன்

இதைக்கேட்ட ரகுவரன் இவ்வளவு நாளா அவனுக்கு தண்டசோறு போட்டுட்டு இருந்தோம், இப்போ அந்த பொண்ணு ஏன் கட்டிட்டு வந்து தண்டசோறு போடணுமா என்று கோபப்பட்டு பேச முருகன் ரேவதி மாலையும் கழுத்துமாக வந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.