கெட்டி மேளம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: ரொமான்ஸ் மோடில் அஞ்சலி.. கையில் கட்டோடு வந்த வெற்றி.. கெட்டி மேளம் சீரியல்
கெட்டி மேளம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: தலை தீபாவளிக்கு அஞ்சலி வீட்டிற்கு வந்த மகேஷிற்கு தலையில் எண்ணெய் வைத்து குளிப்பாட்டி விடுகிறார் அஞ்சலி.

கெட்டி மேளம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலி மகேஷ் குறித்து நல்ல விதமாக சொல்ல அதை கேட்டு மகேஷ் சந்தோஷமடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அஞ்சலி- மகேஷ் ரொமான்ஸ்
அதாவது, அடுத்த நாள் துளசி ஜாலியாக சுத்தி கொண்டு திரிய பாட்டி என்னடி சுத்திகிட்டு இருக்க.. நீ தான் மாப்பிள்ளைக்கு எண்ணெய் வச்சி தலைக்கு குளிக்க வைக்கணும் என்று சொல்கிறாள். பிறகு அஞ்சலி மகேஷ்க்கு எண்ணெய் வைத்து தலைக்கு குளிக்க வைக்க இருவருக்கும் இடையே ரொமான்ஸ் ஏற்படுகிறது.
அடுத்ததாக மறுபக்கம் ஈஸ்வரமூர்த்தி கேசவனை அவமானப்படுத்தி பேச கேசவன் கோபித்து கொண்டு வெளியே வருகிறான். வெற்றி ஓடி வந்து அப்பா பேசியதை எல்லாம் மனசுல வச்சிக்காதீங்க என்று சமாதானம் செய்து அழைத்து செல்கிறான்.
அசிங்கப்படும் முருகன்
அடுத்து லட்சுமி வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க முருகன் சாப்பாட்டு தட்டுடன் உட்கார்ந்திருக்க இதை பார்த்த ரகுவரன் இன்னும் பூஜையே முடியல அதுக்கு உனக்கு சாப்பாடு கேட்குதா? எப்பவும் கீழே தானே உட்கார்ந்து சாப்பிடுவ, இப்போ என்ன சோபாவில் உட்கார்ந்திருக்க என அவனமானப்படுத்தி பேசுகிறான். பூ கொடுக்க வந்திருந்த ரேவதி இதையெல்லாம் கவனிக்கிறாள்.
ரேவதிக்கு தெரியவரும் உண்மை
கவிதா ரகுவரனிடம் அவர் எவ்வளவு வேலை செய்தார் தெரியுமா? காலையிலேயே சாப்பிடல நான் தான் சாப்பிட சொன்னேன் என்று ரகுவரனை திட்டி அனுப்புகிறாள். பிறகு ரேவதி கவிதாவிடம் ரகுராம் கூறியது விசாரிக்கிறாள். கவிதா முருகன் தத்து பிள்ளை என்று சொல்கிறாள்.
மேலும் படிக்க: வீட்டில் வைத்து பூட்டப்பட்ட அஞ்சலி.. கெட்டி மேளம் சீரியல்
முருகனுடன் நெருங்கும் ரேவதி
இதனால் ரேவதி முருகனிடம் மேலும் நட்பாக பழக தொடங்குகிறாள். அடுத்த நாள் வெற்றி எப்பவும் அக்கா பேரை சொல்லிட்டே துளசியை பார்க்க போக முடியாது என யோசிக்கிறான். இதற்காக துளசியிடம் போனில் சொன்னபடியே கையில் பேண்டஜ் உடன் வீட்டிற்கு எல்லாரும் வெற்றியை பார்த்து ஷாக்காகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்