கெட்டி மேளம் சீரியல் மார்ச் 19 எபிசோட்: தல தீபாவளிக்கு தயாரான மகேஷ், அஞ்சலி - கெட்டி மேளம் சீரியல்
கெட்டி மேளம் சீரியல் மார்ச் 19 எபிசோட்: கல்யாணம் முடிந்து வீட்டிற்குள்ளே இருக்கும் அஞ்சலி, தற்போது தல தீபாவளிக்காக அம்மா வீட்டிற்கு வருகிறாள்.

கெட்டி மேளம் சீரியல் மார்ச் 19 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி கொடுத்த ஐடியாவால் வெற்றி கல்யாண ஏற்பாட்டில் இருந்து தப்பிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அஞ்சலியின் சந்தேகம்
அதாவது, அஞ்சலி தூங்கிய பிறகு மகேஷ் வீட்டை சுத்தம் செய்து வைக்க அடுத்த நாள் அஞ்சலி தினமும் நான் தூங்கிய பிறகு யாரோ வீட்டை சுத்தம் பண்றாங்க என சந்தேகம் அடைகிறாள்.
அடுத்து அஞ்சலி காபி குடிக்கும் போது கை தவறி காபி கீழே விழுந்து உடைய மகேஷ் டென்ஷன் ஆகிறான், ஆனால் வெளியில் காட்டாமல் பரவாயில்லை அஞ்சலி என்று சொல்லி அவனே சுத்தம் செய்கிறான்.
அஞ்சலிக்கு வரும் தலை தீபாவளி அழைப்பு
அடுத்த நாள் இங்கே லட்சுமி வீட்டில் தீபாவளி குறித்த பேச்சு எழ தல தீபாவளிக்கு மகேஷ் அஞ்சலியை அழைக்க வேண்டும் என திட்டமிடுகின்றனர்.
சிவராமன் மகேஷ்க்கு போன் செய்து மகேஷ் அஞ்சலியை தல தீபாவளிக்கு அழைக்க மகேஷ் வாங்க மாப்பிள்ளைனு ஆர்டர் போடுங்க மாமா வந்துடுறோம் என்று சொல்லி போனை வைக்கிறான்.
பிறகு அஞ்சலியிடம் விஷயத்தை சொல்ல அவள் மிகுந்த சந்தோசம் அடைகிறாள், நான்கு நாள் அங்க தான் இருக்கனும் என்று சொல்ல மகேஷ் முகம் மாற அஞ்சலி கோபித்து கொள்ள மகேஷ் சரி இருந்துட்டு வரலாம் என சமாதானம் செய்கிறான்.
வெற்றியின் திட்டம்
இதையடுத்து வெற்றி துளசி போட்டோவை பார்த்து ரசித்தபடி இருக்க அங்கு வந்த மீனாட்சி என்ன தம்பி துளசி கிட்ட பேசிட்டு தான் இருக்கீங்களா? என்று கேட்க வெற்றி இல்லை என்று சமாளிக்கிறான். மேலும் வெற்றி அக்கா மாமாவை தீபாவளிக்கு வீட்டிற்கு கூப்பிடலாம் என்று சொல்ல ஈஸ்வர மூர்த்தியும் வெற்றியின் பாட்டியும் அதெல்லாம் எதுக்கு என டென்ஷன் ஆகின்றனர்.
வீட்டிற்கு வரும் அஞ்சலி
ஆனால் வெற்றி இருவரையும் சமாதானம் செய்து சம்மதிக்க வைக்கிறான். அடுத்த நாள் துளசியை பாலோ செய்ய துளசி வெற்றிக்கு போன் செய்து தன்னை பாலோ செய்பவனை எச்சரிக்க சொல்லி சொல்கிறாள். அடுத்து மகேஷ் அஞ்சலி தல தீபாவளிக்காக லட்சுமி வீட்டிற்கு வருகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்