கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: உண்மையை அறிய துடிக்கும் வெற்றி.. கெட்டி மேளம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: உண்மையை அறிய துடிக்கும் வெற்றி.. கெட்டி மேளம் சீரியல்

கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: உண்மையை அறிய துடிக்கும் வெற்றி.. கெட்டி மேளம் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 18, 2025 04:21 PM IST

கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: வெற்றிக்கு அவன் ஆக்சிடெண்ட் செய்த விஷயம் குறித்த தகவலை தெரிந்து கொள்ள ஹாஸ்பிட்டலுக்கு செல்கிறான்,

கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்:  உண்மையை அறிய துடிக்கும் வெற்றி..  கெட்டி மேளம் சீரியல்
கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: உண்மையை அறிய துடிக்கும் வெற்றி.. கெட்டி மேளம் சீரியல்

டார்ச்சர் செய்யும் மகேஷ்

அதாவது அஞ்சலி உங்களுக்கு எந்தப் பெயரையும் வைக்கல என்று சொல்ல மகேஷ் அதை ஏற்க மறுக்கிறான். என்னை நாய்னு சொல்லு, குரங்குன்னு சொல்லு என்று டார்ச்சர் செய்ய தொடங்க அஞ்சலி சொல்ல மறுக்கிறாள்.

மீண்டும் மன்னிக்கும் அஞ்சலி

இதனால் உச்ச கட்ட டென்ஷன் ஆகும் மகேஷ் அஞ்சலியை முட்டி போட வைத்து நைட்டு முழுக்க கொடுமைப்படுத்துகிறான். அடுத்த நாள் காலையில் மகேஷ் அஞ்சலியிடம் தெரியாமல் சென்று விட்டதாக சொல்லி பழையபடி மன்னிப்பு கேட்க அஞ்சலியும் அவனை மன்னிக்கிறாள்.

அண்ணிக்கு நன்றி சொல்லும் வெற்றி

மறுபக்கம் வெற்றி துளசியை அழைத்துச் சென்று டிராப் செய்து விட்டு வந்த பிறகு அண்ணி மீனாட்சியுடன் எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் என்று சொல்லி நன்றி சொல்கிறான். இதைத் தொடர்ந்து இங்கு வெற்றி தியாவுடன் வெளியே செல்கிறான்.

வெற்றிக்கு வரும் நினைவு

அப்போது தியாவிடம் எப்படி அடிபட்டது என்று கேட்க தியா ஆக்சிடென்ட் நடந்த விஷயத்தை சொல்ல வெற்றிக்கு அவன் செய்த கார் ஆக்சிடென்ட் பற்றிய விஷயங்கள் கண் முன் வந்து செல்கிறது. உடனே ஹாஸ்பிடல் கிளம்பி செல்கிறான்.

சமாளிக்கும் டாக்டர்

குறிப்பிட்ட தேதியில் நடந்த ஆக்சிடென்ட் குறித்த விவரங்களை கேட்க கொடுக்க மறுக்கின்றனர். நான் எக்ஸ் எம்எல்ஏ ஈஸ்வரமூர்த்தி ஓட பையன் என்று சொல்லி வெற்றி ரிபோட்டுகளை வாங்குகிறான். ஆனால் டாக்டர் அது வந்துவிட அவங்க மூணு பேரும் நல்லபடியா குணமாகி வீட்டுக்கு போயிட்டதாக சொன்னேனே என்று சொல்லி சமாளிக்கிறார்.

அத்தோடு ஹாஸ்பிட்டலில் இருந்து வெற்றியை அனுப்பியும் வைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.