கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: வெற்றிக்கு அட்வைஸ் சொன்ன லட்சுமி.. மகேஷை உளவு பார்க்கும் அஞ்சலி..
கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், வெற்றி வேறொரு பெண்ணை காதலிப்பதாக தெரிந்த நிலையில், லட்சுமி அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: வெற்றிக்கு அட்வைஸ் சொன்ன லட்சுமி.. மகேஷை உளவு பார்க்கும் அஞ்சலி..
கெட்டி மேளம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் லட்சுமி சிவராமன் ஆகியோர் ஈஸ்வரமூர்த்தியிடம் உதவி கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வெற்றிக்கு அட்வைஸ்
அதாவது ஈஸ்வரமூர்த்தி லட்சுமியிடம் வெற்றி உங்ககிட்ட தான் எல்லா விஷயத்தையும் சொல்றான். அவன் யாரை காதலிக்கிறான் அப்படின்னு கேட்டு சொல்லுங்க என்று உதவி கேட்கிறார். இதையடுத்து, லட்சுமி வெற்றியை சந்தித்து உனக்கு கல்யாணம் முடிவு பண்ணி பத்திரிக்கை எல்லாம் அடிச்சு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. அப்படி இருக்கும்போது வேறொரு பொண்ணை காதலிக்கிறது தப்பு என்று சொல்கிறாள்.
