கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: அஞ்சலியின் சீனியரால் டென்ஷனாகும் மகேஷ்.. கெட்டி மேளம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: அஞ்சலியின் சீனியரால் டென்ஷனாகும் மகேஷ்.. கெட்டி மேளம் சீரியல்

கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: அஞ்சலியின் சீனியரால் டென்ஷனாகும் மகேஷ்.. கெட்டி மேளம் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 11, 2025 02:09 PM IST

கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: அஞ்சலியின் சீனியர் அவளுக்கு கை கொடுப்பதையும், பாட்டு பாட சொல்வதையும் பார்த்து மகேஷ் டென்ஷன் ஆகிறார்.

கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: அஞ்சலியின் சீனியரால் டென்ஷனாகும் மகேஷ்.. கெட்டி மேளம்  சீரியல்
கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: அஞ்சலியின் சீனியரால் டென்ஷனாகும் மகேஷ்.. கெட்டி மேளம் சீரியல்

கல்யாணம் பண்ண சொல்லும் வெற்றி

அதாவது, தியா பாப்பா தூக்கம் வராததால் வெற்றிக்கு போன் செய்து பேசுகிறாள், கண்ணை மூட்டிட்டு தூங்கு.. கண்டிப்பா தூக்கம் வரும் என்று சொல்லி தூங்க வைக்க தியா துளசியிடம் போனை கொடுக்கிறாள். துளசி வெற்றியிடம் டல்லாக பேச என்னாச்சு என்று கேட்கிறான். கல்யாண விஷயம் பற்றி சொல்ல வெற்றி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று சொல்கிறான்.

நம்பிக்கை தரும் மீனாட்சி

ஆனால் துளசி தனக்கு கல்யாணத்தில் விருப்பமே இல்ல, எனக்கு தியா மட்டும் போதும் என்று சொல்ல வெற்றி ஷாக் ஆகிறான். இங்கே துளசி சொன்ன வார்த்தையால் வெற்றி அப்செட்டில் இருக்கிறான், அப்போது அங்கு வந்த மீனாட்சி என்னாச்சு தம்பி என்று கேட்க வெற்றி நடந்த விஷயத்தை சொல்கிறான். மீனாட்சி துளசியோட நம்பிகையை வாங்கு, அப்போ தான் அவ மனசை மாற்ற முடியும் என சொல்கிறாள்.

சீனியரை சந்திக்கும் அஞ்சலி

மறுபக்கம் பார்ட்டியில் அஞ்சலியை அவளது சீனியர் ஒருவர் பார்க்கிறார். பிறகு அஞ்சலியிடம் நீ என்னுடைய பாஸை தான் கல்யாணம் பண்ணி இருக்கேனு எனக்கு தெரியாம போச்சு என்று கை கொடுத்து பேச இதை பார்த்த மகேஷ் கடுப்பாகிறான். ஆனால் அதை வெளியே காட்ட முடியாமல் தவிக்கிறான்.

சந்தோஷத்தில் அஞ்சலி

அடுத்து இங்கே சீனியர் அஞ்சலியிடம் நீ தான் நல்லா பாடுவல.. இந்த பார்ட்டியில் கண்டிப்பாக ஒரு பாட்டு பாடணும் என்று சொல்கிறான். அஞ்சலியும் ஒரு பாட்டு பாடி கை தட்டு வாங்க மகேஷ் நீ, உன் பாட்டு எல்லாமே எனக்கு மட்டும் தான் அஞ்சலி என மனதுக்குள் சொல்லி கொள்கிறான்.

அடுத்து அஞ்சலி மகேஷ் என இருவரும் சாப்பிடும் போது மகேஷ் அவளுக்கு ஊட்டி விட அஞ்சலி சந்தோஷமாகிறாள். எனக்கு நீங்க ஹஸ்பண்ட் மட்டுமில்ல அப்பா அம்மா எல்லாமே நீங்க தான் என்று சொல்கிறாள்.

தவிக்கும் மகேஷ்

அடுத்து அஞ்சலி மற்றும் மகேஷ் வீட்டிற்கு வருகின்றனர், அஞ்சலி பார்ட்டி ரொம்ப நல்லா இருந்துச்சு. நான் ரொம்ப ஜாலியாக என்ஜாய் பண்ணேன் என்று தூங்க செல்ல மகேஷ் அங்கு நடந்ததையெல்லாம் நினைத்து நினைத்து டென்ஷன் ஆகிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.