மருத்துவக் கனவை நிறைவேற்ற திருமணம்.. 4 மனைவிகள்.. முத்துலட்சுமி ரெட்டியின் உறவினர்.. ஜெமினி கணேசனின் கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மருத்துவக் கனவை நிறைவேற்ற திருமணம்.. 4 மனைவிகள்.. முத்துலட்சுமி ரெட்டியின் உறவினர்.. ஜெமினி கணேசனின் கதை

மருத்துவக் கனவை நிறைவேற்ற திருமணம்.. 4 மனைவிகள்.. முத்துலட்சுமி ரெட்டியின் உறவினர்.. ஜெமினி கணேசனின் கதை

Marimuthu M HT Tamil
Nov 17, 2024 09:05 AM IST

மருத்துவக் கனவை நிறைவேற்ற திருமணம்.. 4 மனைவிகள்.. முத்துலட்சுமி ரெட்டியின் உறவினர்.. ஜெமினி கணேசனின் கதையை அவரது பிறந்த நாளில் பார்ப்போம்.

மருத்துவக் கனவை நிறைவேற்ற திருமணம்.. 4 மனைவிகள்.. முத்துலட்சுமி ரெட்டியின் உறவினர்.. ஜெமினி கணேசனின் கதை
மருத்துவக் கனவை நிறைவேற்ற திருமணம்.. 4 மனைவிகள்.. முத்துலட்சுமி ரெட்டியின் உறவினர்.. ஜெமினி கணேசனின் கதை

யார் இந்த ஜெமினி கணேசன்?: புதுக்கோட்டையைச் சார்ந்த ராமசாமி ஐயர், கங்கம்மாள் ஆகியோருக்கு 1920ஆம் ஆண்டு, நவ.17ஆம் தேதி தேவதாசி குடும்பத்தில் மகனாகப் பிறந்தவர், ஜெமினி கணேசன்.

இவரது சொந்த அத்தை தான் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி(இவர் தேவதாசி ஒழிப்புமுறையை நிறைவேற்றுவதில் முக்கியப்பங்காற்றியவர்). தந்தையின் மரணத்திற்குப் பிறகு, தனது தாய் மற்றும் பாட்டியுடன் சென்னையிலுள்ள அத்தை முத்துலட்சுமி ரெட்டியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஒப்படைக்கப்பட்டார்.

சிறிது காலம் ராமகிருஷ்ண மிஷனில் கல்வி பயின்ற ஜெமினி கணேசன் புதுக்கோட்டை திரும்பி, அவ்விடமே உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளியை முடித்தார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஜெமினி கணேசனுக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவாக இருந்தது.

இதையறிந்த திருச்சி டி.ஆர். அலமேலு என்பவரின் தந்தை, தனது மகளைத் திருமணம் செய்தால் தாங்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்களுக்கு மருத்துவச் சீட்டு பெற்றுத்தருவதாக ஜெமினி கணேசனுக்கு உறுதியளித்தார்.

மருத்துவக்கனவை நிறைவேற்ற திருமணம் செய்த ஜெமினி கணேசன்:

இதனையடுத்து அலமேலுவுடன் 1940 ஜூனில் ஜெமினி கணேசனுக்கு திருமணம் நடைபெற்றது. பின் அலமேலுவின் தந்தையும் தனது மாமனாரும் மரணித்துப்போக பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றினார், ஜெமினி கணேசன்.

ஜெமினி கணேசனின் திரை வாழ்க்கை:

அதன்பின்னர் ஜெமினி ஸ்டுடியோவில், 1947ஆம் ஆண்டில் கணேசன் தயாரிப்புப் பிரிவு நிர்வாகியாகப் பணிபுரிந்தார். அதன்பின்னரே இவரது பெயருக்கு முன்பு, ஜெமினி என்னும் முன்பெயர் ஒட்டிக்கொண்டது. பின், மிஸ் மாலினி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார், நடிகர் ஜெமினி கணேசன்.

அதன்பின், சக்ரதாரி படத்தில் கிருஷ்ணராக நடித்துள்ளார். 1953ஆம் ஆண்டு வில்லனாக தாய் உள்ளம் படத்திலும், பின் மூன்று பிள்ளைகள் திரைப்படத்திலும் நடித்தார். அதன்பின், மனம்போல மாங்கல்யம் படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகம் ஆனார், நடிகர் ஜெமினி கணேசன்.

பின்னர் காதல் திரைப்படங்களில் அதிகம் நடித்தார், நடிகர் ஜெமினி கணேசன். தவிர, கப்பலோட்டிய தமிழன், களத்தூர் கண்ணம்மா, வீரபாண்டிய கட்டபொம்மன், வஞ்சிக்கோட்டை வாலிபன்(பிரமாண்ட பொருட்செலவில் உண்டான படம்), பார்த்திபன் கனவு, தேன் நிலவு ஆகிய தமிழின் முக்கியப் படங்களிலும் நடித்தார், ஜெமினி கணேசன்.

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஜெமினி கணேசன்:

முன்னர், கப்பலோட்டிய தமிழனிலும் வீரபாண்டிய கட்டபொம்மனிலும் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடித்த ஜெமினி கணேசன், பின் 1966ஆம் ஆண்டு முகராசியில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார்.

பின், இவர் சாவித்திரியுடன் இணைந்து நடித்த கொஞ்சும் சலங்கை (1962) 22 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. பின் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பெண்ணாக வேடமிட்டு நடித்த படம் தான், நான் அவன் இல்லை. இதில் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிஸ்ஸியம்மா, கணவனே கண்கண்ட தெய்வம், சாந்தி நிலையம், வாழ்க்கை படகு, ராமு, தாமரை நெஞ்சம், புன்னகை ஆகியவை இவரது படைப்பில் வெளியான பிற படைப்புகளாகும்.

இந்தி திரையுலகிலும் முத்திரை பதித்த ஜெமினி கணேசன்:

பின் மிஸ்ஸியம்மாவின் ரீமேக்கான மிஸ் மேரி திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் தடம்பதித்தார், ஜெமினி கணேசன். பின், இந்தியில் தேவ்தா, ராஜ் திலக், நஸ்ரானா ஆகியப் படங்களில் நடித்தார். 85ஆம் ஆண்டுக்குப் பிறகு, குணச்சித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார், நடிகர் ஜெமினி கணேசன். அதில் உன்னால் முடியும் தம்பி, அவ்வை சண்முகி ஆகியவை அவருக்கு பெயர் வாங்கித் தந்தவை.

திரைவாழ்வில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்விலும் காதல் மன்னனாக திகழ்ந்தவர், நடிகர் ஜெமினி கணேசன். அலமேலு, நடிகை சாவித்திரி, புஷ்பவல்லி, ஜூலியானா ஆண்ட்ரு ஆகிய நான்கு பேரை மணமுடித்து வாழ்ந்தவர், நடிகர் ஜெமினி கணேசன். அத்தகைய ரியல் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.