Yaar Paiyyan: தந்தையை தேடி சிறுவன் மேற்கொள்ளும் பயணம்!கிளைமாக்ஸில் டுவிஸ்ட் - சிறந்த பிளாக் அண்ட் ஒயிட் காமெடி படம்
தந்தையை தேடி சிறுவன் மேற்கொள்ளும் காமெடி பயணமாகவும் தமிழில் சிறந்த பிளாக் அண்ட் ஒயிட் காமெடி படமாக இருந்து வருகிறது யார் பையன் திரைப்படம். படத்தின் கிளைமாக்ஸில் வரும் டுவிட்ஸ்டும், கருத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

தமிழில் வெளியான பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் சிறந்த காமெடி படமாகவும், குழந்தைகளுக்கான படமாகவும் அனைத்து வயதினரையும் கவர்ந்த படம் யார் பையன். டி.ஆர். ரகுநாத் இயக்கி இந்த படத்துக்கு ஸ்ரீதர் திரைக்கதை எழுதியிருப்பார். படத்தின் முதல் ப்ரேம் முதல் கடைசி பிரேம் வரை விடாது சிரிப்பை வரவழைக்கும் விதமாக அமைந்திருந்தது இந்த படம்.
படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் அப்போதைய நட்சத்திர ஜோடிகளான ஜெமினி கணேசன் - சாவித்ரி, ரியல் லைஃப் ஜோடிகளான என்எஸ்கே - மதுரம், டி.ஆர். ராமச்சந்திரன், வி.கே. ராமசாமி நடித்திருப்பார்கள். ஆனால் படத்தின் கதையை பூரி என்கிற சிறுவனை அடிப்படையாக வைத்து அமைந்திருக்கும். அதன்படி கதையின் குட்டி நாயகனாக வலம் வந்த பூரியின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை டெய்சி இரானி நடித்திருப்பார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து ஃபர்கான் அக்தர், பிரபல நடன இயக்குநர் ஃபராகானின் பெரியம்மா தான் இந்த டெய்சி. 1960 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் தோன்று தனது குறும்புத்தனமான நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார்.